ஷேர் மார்கெட் மீண்டு(ம்) எகிறியது : தங்கம் விலை தடதடவென சரிந்தது!

ஷேர் மார்கெட் மீண்டு(ம்) எகிறியது : தங்கம் விலை தடதடவென சரிந்தது!

ஷ்யா உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதை தொடர்ந்து, உலக அளவில் பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை கண்ட நிலையில் இன்று மீண்டு(ம்) எகிறியது!. அதுபோன்று கச்சா எண்ணெய், தங்கம், ஆகியவற்றின் விலைகள் கடும் உயர்வை கண்டன. இது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. நேற்று ரூ.4,951 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.4,801 ஆக விற்பனை ஆகிறது. நேற்று 39,608 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 1200 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2.70 குறைந்து ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக நேற்று ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.1200 சரிவு கண்டிருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்று நேற்று கடுமையாக வீழ்ச்சியை கண்ட பங்குசந்தைகள், இன்று படிப்படியாக மீட்சி கண்டு வருகின்றன. இன்று காலை மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 1630 புள்ளிகள் உயர்ந்து 56,160 ஆக வணிகமாகிறது. தேசிய பங்கு சந்தை நிப்டி 493 புள்ளிகள் உயர்ந்து 16,741 ஆக வணிகமாகிறது.

error: Content is protected !!