September 25, 2021

மே -15க்குள் உள்ளாட்சித் தேர்தல் – ஐகோர்ட்டில் உறுதி

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது. இதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
local feb 20
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளை பின்பற்றி பிறப்பிக்கவில்லை’ என்று கூறி உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தார். புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.  இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசரணைக்கு வந்த போது, மே 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உத்தேச தேதியை கூறாமல் சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.