ஊரடங்குக் காலத்தில் உங்கள் பொழுதை மகிழ்ச்சியாக்க உதவும் விஜய் டிவி!

நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையை நாம் அனைவருமே ஒன்றிணைந்து எதிர் கொண்டு வருகிறோம். மாதம் தோறும் 700 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள ஸ்டார் இந்தியா நெட்வொர்க் நுகர்வோர் பாதுகாப்பிற்காக நாடு தழுவிய சிறப்பு பிரச்சாரத்தை பிரகடனப்படுத்துகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ரீசார்ஜை பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செய்யுங்கள் என்பதுதான் அது.இந்த பிரச்சாரத்தின் நோக்கம் வீட்டில் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்! அதற்கான கட்டணங்களையும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளுங்கள். இதுவே நீங்கள் பாதுகாப்பாக தொடர்வதற்கு வழிவகுக்கும் #StayHomeStaySafe

எங்கள் பிரச்சாரம் வாடிக்கையாளர்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்க ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. வீட்டில் பொழுதுபோக்குடன் இருக்கவும் ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகளுக்கான கட்டணங்களை செலுத்தவும், இக்கட்டான இந்த காலங்களில் அறிவுறுத்துகிறது. நேயர்களின் அபிமான GEC, Kids, Movies and Sports சேனல்களை பல மொழிகளில் ஒளிபரப்புவதன் மூலம் இந்த பாதுகாப்பு வழிமுறையையும் நேயர்களுக்கு எடுத்துச்செல்ல கடமைப்பட்டுள்ளோம்”, என்று ஸ்டார் இந்தியாவின் விநியோக மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் தலைவர் குர்ஜீவ் சிங் கபூர் கூறினார்.

ஸ்டார் இந்தியா தனது சேனல் நெட்ஒர்க் வாயிலாக பிரபலமான மற்றும் நேயர்களின் அபிமான நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கிவருகிறது. மகாபாரதம் போன்ற கிளாசிக் நிகழ்ச்சி கள், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் ஹோஸ்டேஜ்ஸ், ஸ்டார் பிளஸிலும், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர், ஸ்டார் விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒடவம் முடியாது ஒளியவும் முடியாது மற்றும் நேயர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘லொள்ளு சபா’; மற்றும் மற்றும் விஜய் சூப்பர்-ல் அற்புதமான பிரீமியர்களுடன் திரைப்பட வரிசைகளை காணலாம். ஸ்டார் கோல்ட் சேனல் மிகப்பெரிய அதிரடி திரில்லர் திரைப்படமான வார், நகைச்சுவை ஹவுஸ்ஃபுல் 4, பாலா, தர்பார் மற்றும் சாப்பாக் உள்ளிட்ட பல சமீபத்திய திரைப்படங்களை தனது பார்வையாளர்களுக்கு வழங்கி மகிழ்வித்து வருகிறது.

ஸ்டார் மூவிஸ் -ல் குழந்தைகளுக்கு பிடித்தமான திரைப்படங்களான மேரி பாபின்ஸ் ரிட்டர்ன்ஸ், டம்போ மற்றும் தி நட்ராக்ராகர் அண்ட் தி ஃபோர் ரேல்ம்ஸ் ஆன் பிலேடெட்'; ஸ்டார் மூவிஸ் ன் பிரபலமான மார்வெல் மூவிஸ் செலெக்ஷன் மற்றும் சமீபத்திய சீசன் மற்றும் காஃபி வித் கரண் மற்றும் மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் பார்வையாளர்கள் சில சிறந்த ஆங்கில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணலாம்.

100 மணிநேர புத்தம் புதிய நிகழ்ச்சி வடிவைப்புகள் குழந்தைகளுக்கான கிட்ஸ் சேனல்களில் சேர்க்கப்பட்டுள்ளது. டிஸ்னி மற்றும் ஹங்கமா சேனல்களில் சம்மர் போனான்ஸாவாக புதிய சீரிஸ்கள் பாப்பு, குட்டு, குரு கணேஷா, குறும்பு பையன் ஹகேமரு, செலஃபீ வித் பஜ்ரங்கி, டோரா மன், சச்சா சவுத்திரி அண்ட் மிராகுலஸ் ஆகிய நிகழ்ச்சிகளை ரசிக்கலாம் விளையாட்டு ரசிகர்களுக்கு கிரிக்கெட் கனெக்ட்டட் மூலம் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் ஒவ்வொரு வாரமும் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடுவார்கள். பெஸ்ட் ஆஃப் IPL, VIVO PKL விளையாட்டு நிகழ்ச்சிகளை மலரும் நினைவுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
நெட்ஒர்க்கில் காணலாம்.

நேஷனல் ஜியோகிராஃபிக்கில் கலந்துரையாடல் விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் நற் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் – ஊரடங்கு ஆகியவற்றை வரையறுக்கும் வீட்டில் இருந்தபடியே படமாக்கப்பட்ட தொகுப்புகளை காணலாம். ஒரு நெட்வொர்க்காக ஸ்டார் டிவி 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான இந்தியர்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறது, மேலும் இந்த கடினமான காலங்களிலும் அவை முழுமனதோடு தொடரும்.