கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா, உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்று சாதனை!

கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா, உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்று சாதனை!

ர்வதேச அளவில் பெண்களுக்கென அழகிப் போட்டி நடைபெறுவது போல திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக நேரடியாக இல்லாமல் ஆன்லைன் வாயிலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்த போட்டி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்தது. இந்தியா சார்பாக இப்போட்டியில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா (வயது 25) இப்போட்டியில் மிஸ் டிரான்ஸ் குளோபல் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருக்கிறார்.

டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மிஸ். திருநங்கை பட்டம் வென்றதற்கான விருது ஸ்ருதி சித்தாராவுக்கு ஆன்லைன் முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சித்தாராவிற்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தாரா Most Eloquent Queen என்ற பட்டத்தையும் இதே போட்டியில் வென்றிருக்கிறார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதை அடுத்து அவருக்கு கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிஸ் திருநங்கை போட்டியில் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் பெற்றனர். கேரளாவில் வைக்கோம் பகுதியைச் சேர்ந்த சித்தாரா மிஸ். திருநங்கை விருது வென்றது குறித்து பேசுகையில், “எனக்காக, நான் சார்ந்துள்ள எனது சமூகத்திற்காக, என் நாட்டிற்காக, உலக திருநங்கை அமைப்புக்காக, ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட என அனைவருக்குமான விருதாக இந்த பட்டத்தை பார்க்கிறேன். ஸ்ருதி சித்தாரா எனும் நான் இப்போது ‘2021-ஆம் ஆண்டில் மிஸ் டிரான்ஸ் குளோபல் டைட்டில் வின்னர்’. இந்த வெற்றியை நான் பெற காரணமாகவும், எனக்கு துணையாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் நோக்கில் என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். தற்போது இந்த வெற்றியின் மூலம் அதற்கு நான் விடை கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!