எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து கைது ஏன்? + பச்சமுத்து சொத்துப் பட்டியல்!

எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து கைது ஏன்? + பச்சமுத்து சொத்துப் பட்டியல்!

எஸ்.ஆர்.எம். மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் சீட் தருவதாக மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த விவகாரத்தில், கல்லூரி வேந்தர் பச்சமுத்துவிடம் போலீசார் நேற்று விடிய, விடிய விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

srm aug 26

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் திடீரென தலைமறைவானார். முன்னதாக மதன், தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் வசூலித்த பணம் முழுவதையும், பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மாயமான தன் மகன் மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக மதன் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது வரை 112 மாணவர்களிடம் ரூ.72 கோடிக்கும் மேல் வாங்கி மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீதான மோசடி வழக்குகள் ஆகியவை குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை அதிகாரிகள் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் அவ்வப்போது தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று கெடு விதித்தனர். இந்த நிலையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை நேரில் ஆஜராகும் படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று அவர் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார். அங்கு அவரை தனி அறையில் வைத்து கூடுதல் துணை கமிஷனர், 3 உதவி கமிஷனர்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தலைமையில் விசாரணை நடந்தது. பச்சமுத்துவிடம் விசாரணை நடத்துவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தும் விஷயம் வெளியே கசிந்தது. இதையடுத்து விசாரணை நடைபெற்ற பழைய கமிஷனர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். அலுவலகத்தில் நுழைய பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

300 கேள்விகள்

மருத்துவ சீட்டுக்காக பச்சமுத்துவை மாணர்வர்கள், பெற்றோர் அணுகினால், அவர் மதனை பார்க்கும் படி அனுப்பி வந்தார். மாணவர்களிடம் பணம் வாங்கி மதன் மோசடியில் ஈடுபட்டாலும் அதற்கு முழு காரணமாக பச்சமுத்து தான் இருந்துள்ளார். இதனால், பச்சமுத்துவிடம் இருந்து பணத்தை பெற்று தருமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் போலீசிலும், கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார், பல்வேறு கேள்விகளை கேட்டு பச்சமுத்துவை திணறடித்தனர். குறிப்பாக மாணவர்களிடம் வசூலித்த சுமார் ரூ.72 கோடி பணம் எங்கே. மதனை எங்கு மறைத்து வைத்துள்ளீர்கள் என அடுத்தடுத்து 300 கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அவர், சில கேள்விகளுக்கு மவுனம் சாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்த விசாரணையில் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பச்சமுத்து மீது மோசடி வழக்கு

ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பச்சமுத்து மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பச்சமுத்து மீது காவல்துறை வழக்கு பதியு செய்துள்ளது. நம்பிக்கை மோசடி செய்ததாக பச்சமுத்து மீது ஐபிசி 406 – வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல் :

பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்-

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்)
வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
வள்ளியம்மாள் பாலிடெக்னிக்
வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி
எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல்மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல் மருத்துவக்கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.மேனேஜ்மெண்ட் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஈஸ்வரி என்ஜீனியரிங் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஆர்ட்ஸ்&சயின்ஸ் மேனேஜ்மென்ட் கல்லூரி – வடபழனி
SIMS Hospital – (வடபழனி)
எஸ்.ஆர்.எம்.ஹோட்;டல் (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (தூத்துக்குடி )
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (திருச்சி )
எஸ்.ஆர்.எம். 5 நட்சத்திர ஹோட்டல் கிண்டி
எஸ்.ஆர்.எம்.ஹாஸ்பிட்டல் மாம்பலம்
எஸ்.ஆர்.எம். பவர் (கடலூர்) (2000 மெ.வாட் கொண்ட மின் உற்பத்தி நிறுவனம் பணிகள் நடைபெறுகிறது)
எஸ்.ஆர்.எம்.டிராவல்ஸ் (சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு Volvo பேருந்துகள்)
எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட்ஸ் (Hyundai, Maruthi போன்ற கார்களை சுமந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்)
எஸ்.ஆர்.எம்.பார்சல் சர்வீஸ்
எஸ்.ஆர்.எம்.எலக்ட்ரிக்கல்ஸ் (சி.எப்.எல்.மற்றும் டியூப்லைட்டுகள் தயாரிக்கும் கம்பெனி)
வளசரவாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவி;ல் உள்ள ஆடம்பர பங்களா
திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி
திருச்சி எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி
டெல்லி நொய்டா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் (200 ஏக்கர் பரப்பளவு)
இலங்கை கொழும்புவில் கல்லூரி
அசோக் நகரில் உள்ள ஐ.ஜே.கே.கட்சி தலைமை அலுவலகம்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
புதிய தலைமுறை வார இதழ்
புதுயுகம் தொலைக்காட்சி
வேந்தர் தொலைக்காட்சி இவற்றுக்கான சொந்தகட்டிடங்கள்.
எஸ்.ஆர்.எம். Constructions – என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இடங்களில் கட்டுமானங்கள்
சென்னை தி.நகர் ஜி.என் செட்டி சாலை அடுக்குமாடி கட்டிடம்.
கிண்டி எஸ்.ஆர்.எம்.இன்போடெக்
ஒட்டுமொத்தமாக எஸ்.ஆர்.எம்.குழுமங்களை பொறுத்தவரை மொத்தம் 65ஆயிரம் பேர் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிவேந்தரின் குடும்பம்

பாரிவேந்தரின் மனைவி பெயர் – ஈஸ்வரியம்மாள்.
மகன்கள் – பி.ரவி.டாக்டர்.பி.சத்தியநாராயணா,
மகள் பெயர் கீதா

இதில் மூத்த மகன் ரவி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கட்டுமானம் டிரான்ஸ்போர்ட் ஹோட்டல்கள் உள்ளிட்ட தொழில்களையும் நிர்வகித்து வருகிறார்.

2வது மகன் சத்தியநாராயணா புதிய தலைமுறை தொலைக்காட்சி, புத்தகம், மற்றும் பல்கலைக்கழத்தின் பெரும்பகுதியை நிர்வகித்து வருகிறார்.

அவரது மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமார் திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி, ராமாபுரம் ஈஸ்வரி எனஜினீயரிங்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை நிர்வகித்து வருகின்றனர்.

error: Content is protected !!