இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு!

க்கள் போரட்டத்தையும் பெரும் நெருக்கடி நிலையை சந்தித்துள்ளதுமான  இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத போராட்டம் காரணமாக கோட்டபய ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சவின் முன்னாள் ஆதரவாளரான டலஸ் அழகபெரும, இடதுசாரியான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அதிபர் தேர்வுக்கான போட்டியில் இருந்தனர். இச்சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யும் வகையில் வாக்குகளைப் பதிவு செய்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 225 எம்.பி.க்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 பேர் வாக்களித்தனர். இவற்றில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெரும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளும் அழகப்பெரும 82 வாக்குகளும் பெற்றனர். அனுரா குமார திசநாயகா 3 வாக்குகள் பெற்றார். இதனால் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அதிபராகியுள்ளார்.

இலங்கையில் கடந்த 1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் மூலம் அதிபர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க 2024 நவம்பர் வரை ஆட்சியில் இருப்பார்.

Related Posts

error: Content is protected !!