இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இலங்கை முழுவதும் 64 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என 4 முக்கிய கட்சிகள் களம் காண்கின்றன. இந்தநிலையில், இலங்கையின் பல தொகுதிகளில் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதலிடத்தில் இருந்து வருகிறது. 2-வது இடத்தில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும், 3-வது இடத்தில் ஜேவிபி கூட்டணியின் மக்கள் சக்தியும் 4-வது இடத்தில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியும் உள்ளன என்று தகவல் வருகின்றன.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள். கொரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல்முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன முன்னிலை வகிக்கிறது.
தற்போது வரை கிடைத்த தகவலின் படி முன்னிலை விவரம்:
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38356
ஐக்கிய மக்கள் சக்தி – 23073
தேசிய மக்கள் சக்தி – 1886
ஐக்கிய தேசிய கட்சி – 1151
இந்த தேர்தல் களக் கணிப்புகளின்படி 225 இடங்களில் பெரும்பாலன இடங்களை மகிந்தா ராஜபக்சேவின் எஸ்.எல்.பி.பி., கட்சி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.’மீண்டும் எஸ்எல்பிபி ஆட்சி அமைந்தால் 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதிபர் அதிகாரங்களை முடிவு செய்யும் சட்டத்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவோம்’ என, அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார்.
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…
தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள்…
சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க்…
”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்…
This website uses cookies.