இலங்கையில் விக்ரமசிங்கேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டும் பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் விக்கிரம சிங்கே மறுத்து வருகிறார். இதையடுத்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்து மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அது தோல்வியில் முடிந்ததாக தகவல் வந்துள்ளது.

இலங்கையில் ரணில் விக்கிரம சிங்கேவின் (68) ஐக்கிய தேசிய கட்சி சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் உள்ளது. பிரதமர் விக்கிரமசிங்கேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்து. அதன் மீதான ஓட்டெடுப்பு இன்று நடைபெறுற்றது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக ரனிலின் கூட்டணிக் கட்சியான சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி வெளிப்படையாக அறிவித்தது. நேற்று இரவு இலங்கை பாராளுமன்றத்தில் ரனில் விக்கிரமசிங்கேற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. ஆனால் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சியினர் ரனிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மகிந்த ராஜபக்சேவின் பொது ஜனபிரமுனா, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவை நம்பிக்கையில்லாத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிகிறது.