இலங்கை நிதி நெருக்கடி ; விபச்சாரத் தொழிலுக்கு மாறும் இளம்பெண்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!

இலங்கை நிதி நெருக்கடி ; விபச்சாரத் தொழிலுக்கு மாறும் இளம்பெண்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!

ம் அண்டை நாடான இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, குடிநீர், பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. பணவீக்கம் அன்றாடம் புதிய பிரச்னைகளை படைத்து வருகிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், நிர்ப்பந்தம் காரணமாக தற்போது இலங்கை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது. இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Standup Movement Lanka (SUML) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் மட்டும் கொழும்பில் பாலியல் தொழிலில் சேரும் இளம் பெண்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாகவும். இவர்களில் பெரும்பாலான பெண்கள். ஜவுளித் தொழிலுடன் தொடர்புடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் விபச்சாரம் சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் விபச்சாரப் பகுதி இல்லை என்றாலும், அங்கு ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில் இந்த பணி நடப்பதாக அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில், புதிய பெண்கள் இப்பணியில் சேருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உயர் கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவிகள் கூட இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து இஷா (21) என்பவர் கூறுகையில், ‘உயர்கல்வி படித்து பணிக்கு செல்ல விரும்பினேன். ஆனால், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்ததால் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. எனது தந்தையில் உடல்நிலை சரியில்லை; தாய் காலமாகிவிட்டார். என்னுடைய சகோதரர் இலங்கை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.இருந்தும் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏற்கனவே மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன். அந்த நிறுவனமும் தற்போது மூடப்பட்டது. வேறுவழியின்றி வீட்டின் நிலைமையை உணர்ந்து ‘ஸ்பா’வில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வரும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. என்னை போன்ற சுமார் 40,000 இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பாதிக்கும் மேற்பட்டோர், கொழும்பில் உள்ளனர். கொழும்பில் செயல்படும் ஸ்பா மையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஆயுர்வேத சிகிச்சைகள், ஆரோக்கிய மையங்கள், மசாஜ் மையங்கள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஸ்பா மையத்தில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு சேர்கின்றனர். அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகினணறனர்’ என்று வேதனையுடன் கூறினார்.

மேலும் இது குறித்து வெளியான ஓர் அறிக்கையில், நிதி நெருக்கடி காரணமாக பெண்கள் பாலியல் தொழிலிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஒரு பாலியல் தொழிலாளி தனக்கு நேர்ந்த துயரத்தை விவரிக்கும் போது, ​​பொருளாதார நிலைமைகள் அத்தகைய சூழ்நிலையை கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். குழந்தைகளுக்கு உணவளிக்க இதையெல்லாம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மிக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!