March 26, 2023

அந்தக் ’கறுப்பு ஆடு’ கருணா இப்பவும் அணி மாற ஆயத்தம்! – சிறிசேனாவுடன் இணைகிறார்?

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்த கருணா, ஒரு கட்டத்தில் அங்கிருந்து விலகி அரசியலில் நுழைய ராஜபக்சேவுடன் கைகோர்த்தார். இதன் மூலம் இலங்கையின் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். அப்பொறுப்பின் மூலம் பிரபாகரனுக்கு செல்வாக்கை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகவே அரசியலுக்குள் நுழைந்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அரசியலுக்குள் நுழைந்த பிறகு பிரபாகரனுக்கு ஆதரவாக கருணா செயல்பட இயலாத சூழல் உருவானது. இதனால் இலங்கை போரின் போது பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனிடையே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா அதிபராக பதவியேற்றதும், கருணாவின் முக்கியத்துவம் தமிழர்கள் பகுதியில் குறைந்தது. இந்த நிலையில் தற்போதைய அதிபர் சிறிசேனாவை சந்திக்க கருணா நேரம் கேட்டுள்ளது இலங்கை நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் கருணாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள சிறிசேனாவும் விரும்புவதாகவும், அதற்காகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீராவின் கோரிக்கையை ஏற்று, கருணா – மகிந்த அமரவீரா சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இலங்கை அரசியலில் ஏற்படும் இந்த புதிய மாற்றமானது இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என்பதுதான் விசேஷம்.