டோல்கேட் ஃபீஸ் கேட்ட ஊழியரை 10 கி.மீ. தூரம் தொங்கவிட்ட லாரி டிரைவர் கைது!- வீடியோ

டோல்கேட் ஃபீஸ் கேட்ட ஊழியரை 10 கி.மீ. தூரம் தொங்கவிட்ட லாரி டிரைவர் கைது!- வீடியோ

ந்திர மாநில சுங்கச் சாவடி ஒன்றில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த முயன்ற டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் வரை லாரியில் தொடங்கவிட்டபடி சென்ற லாரி ஓட்டுநரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு அருகே உள்ள சுங்கச் சாவடியில் அரியாணா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணத்தைச் செலுத்தாமல் சென்றுள்ளது. இதையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசலு என்பவர், லாரியின் முன்பக்கம் உள்ள பம்பர் மீது ஏறி, லாரி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் ஊழியரைப் பொருட்படுத்தாமல் லாரியை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர், சுமார் 10 கி.மீ. தூரம்

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதுகுறித்து ரோந்து பணி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

லாரி ஓட்டுநரை மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த போலீசார், லாரி ஓட்டுநரை கைது செய்து, விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமா பாணியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!