August 15, 2022

பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

மேனேஜர் – டிஜிட்டல் பிராட் 15, கிரடிட் ஆபிசர் 40, கிரடிட் எக்ஸ்போர்ட் / இம்போர்ட் பிசினஸ் 20, பாரெக்ஸ் அக்கியூசிசன் 15, கார்ப்பரேட் கிரடிட் டிபார்ட்மென்ட் 15 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பி.இ., / முதுநிலை பட்டப்படிப்பு / ஏதாவது ஒரு பட்டப்படிப்பு/ சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது :

1.2.2022 அடிப்படையில் 24 – 34, 28 – 40, 25 – 37, 26 – 40 என பதவி வாரியாக மாறுபடுகிறது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை மட்டும்

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசிநாள்:

24.3.2022

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு