September 25, 2021

நாசா விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் டமார்!

நம்ம இந்திய விஞ்ஞானிகள் 104 செயற்கைக்கோள்களுடன் கூடிய ராகெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில் இன்று அமெரிக்காவின் விண்வெளி அமைபான நாசா ஏவிய ராக்கெட் கிளம்பிய ஒருசில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் அந்நாட்டு விஞ்ஞானிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

nasa feb 20

விண்வெளியில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஒன்றுசேர்ந்து, விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றை நிறுவியுள்ளன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சில நாட்கள் அல்லது மாதக்கணக்கில் தங்கியிருந்து, விண்வெளி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம். அங்கு இருப்பவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்காக, நாசா விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்ப முடிவு செய்தது. இதன்படி, ஃபால்கான் 9 ராக்கெட்டில், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஓடம் நேற்றிரவு விண்ணில் பாய தயார் செய்யப்பட்டது.

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட், கிளம்பிய சில மணித்துளிகளிலேயே திடீரென வெடித்துச் சிதறியது. ஏற்கனவே, சனிக்கிழமை கிளம்ப திட்டமிடப்பட்ட இந்த ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும், அனைத்து பரிசோதனைகளும் முடிந்த நிலையில், தற்போது கிளம்பியும் வெடித்துச் சிதறிவிட்டதாக, விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.

ஃபால்கன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தபோதே, வெடித்துவிட்டதால், அதில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஓடம், தனியாகச் சிதறி கீழே விழுந்தது என்றும் இந்த ராக்கெட் தோல்வி அடைந்ததால் பலகோடி நஷ்டம் என்பதோடு, விண்வெளியில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு போய் சேர்க்க முடியுமா? என்பதிலும் சந்தேக நிலை ஏற்பட்டுள்ளது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.