July 28, 2021

தென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு!.

ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலம். நாட்டின் பெரும் பகுதிக்கு கணிசமான மழையை கொடுப்பது இந்த பருவகாலம்தான். அதாவது நாட்டில் 75 சதவீத விழுக்காடு பகுதிகள் இதன் மூலம் மழை பெறுகின்றன. தென் மேற்கு பருவமழை என்பது தீபகற்பத்தின் தென்கோடியில் பொதுவாக மே மாத இறுதியில் தொடங்கும். இந்த மழையானது நாட்டின் உட்பகுதிக்கு படிப்படியாக முன்னேறி, ஜூலை மாத மத்தியில் நாடு முழுவதும் பரவுகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்த பருவ மழை, நாட்டின் வடமேற்கு எல்லையின் முனையில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி படிப்படியாக குறைகிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் ஜூன் 6ம் தேதியும், 2015-ல் ஜூன் 5ம் தேதியும், 2016-ல் ஜூன் 8ம் தேதியும், 2017-ல் மே 30ம் தேதியும், 2018-ல் மே 29-ம் தேதியும் பருவ மழை தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி பருவ மழை தொடங்கும் என கணித்த நிலையில் ஜூன் 6-ம் தேதியில் மழை தொடங்கியது.

இந்த ஆண்டு ஜூன் 5-ல் தொடங்கும் என்ற நிலையில் இன்று ஜூன் 1 தொடங்கி விட்டது. அதன் அறிகுறியாக தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ் வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதியில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.