August 2, 2021

ரொம்ப சீக்கிரம் வேற்றுக் கிரகவாசிகளை மீட் பண்ணப் போறோமே!

வேற்றுகிரக வாசிகளை இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ’ரோடு- மேப்’ அமைந்துள்ளனர். அதன் வழியாக சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் (328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.

allien july 4

இதனிடையே வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். என கூறி உள்ளார்.

மேலும் வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்து உள்ளனர்.அதற்கான செயல்பாடுகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீன மிகபெரிய ரேடியோ தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டு உள்ளது. தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது.

பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீன மிகபெரிய ரேடியோ தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டு உள்ளது. தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது. இது சுமார் 500 மீட்டர் பரந்த நுண்துளை உருண்டதொலைநோக்கி,

இந்த தொலை நோக்கி 1.2 பில்லியன் யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,836 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.இதற்கு வானத்தின் கண் எனபுனை பெயர் சூட்டி உள்ளனர். இது 30 கால்பந்து மைதான அளவு கொண்டதாகும். இது விண்வெளியில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகள் அப்பாலும் பார்க்க கூடியது. 5 ஆண்டுகளுக்கு முன் இதனை அமைக்கும் பணி தொடங்கியது.தற்போது இதன் பணிகள் முடிவடைந்து செயல்படும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.