January 20, 2022

நான் – ஸ்டிக் பாத்திரத்தில் தயாரான உணவால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு!

வர வர எதையும் சாப்பிட தோன்றாததுடன் பயமாகவும் இருக்கிறது. ‘அதில் கலப்படம்’,‘இதில் போலி’ என்று நம்பகத்தன்மை இல்லாத உணவுகள் அதிகமாகி விட்டன. ஆனால உணவுப் பொருட் கள் மட்டும் இல்லை; உணவு தயாராகும் சமையலறையேகூட இப்போது மிக ஆபத்தான தாகத் தான் இருக்கிறது. நம் சமையலறையில், குறிப்பாக நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் உணவை விஷமாக்கும் பல காரணிகள் இருப்பது நம்மில் பலரும் பல ரூபங்களில்  கேள்விப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். முன்னொரு காலத்தில் மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்க ளில் சமையல் செய்து வந்த நாம் இப்போது சொட்டு எண்ணெய் ஊற்றாமல், பாத்திரத்தோடு ஒட்டாமல் சமைத்துத் தரும் நான் ஸ்டிக் பாத்திரங்களைத்தான் பலரும் பயன்படுத்துகிறோம். இவற்றின் அடிப்பகுதி முழுக்க ரசாயன பூச்சு படிந்துள்ளது. ஒவ்வொரு முறை பாத்திரம் சூடாகும் போதும் அதில் நச்சு வாயுக்கள் உருவாகி, உடலுக்கு பல உபாதைகளை உருவாக்கு கின்றன. ஜீரண பிரச்னை தொடங்கி கணையம், கல்லீரல் முதலியவைகூட இதனால் பாதிக்கப்படலாம். இது மெல்ல மெல்ல உடல்நலத்தைக் கெடுத்துவிடும். பல நோய்கள் உருவாகவும் காரணமாகிவிடும் என்று ஏற்கெனவே பல ரிப்போர்ட்டுகள் வந்த நிலையில் இந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன் படுத்தி சமைக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

ஆம், நாம் முதலில் மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, சமையலுக்காக தற்போது, அலுமினியம் நான் ஸ்டிக் என பல வகையில் சமையல் பாத்திரங்கள் வந்து விட்டது. இப்படி நான்- ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு உடல்நல குறைபாடுகள் வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் பெர்ஃப்லோரால்க்ல் (perfluoroalkyl) என்ற கெமிக்கலானது ஆணுறுப்பின் நீளத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் தரத்தையும் குறைக்கிறதாம். இந்த நான் ஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் பூச்சு காரணமாக ஆணுறுப்பு சிறியதாக வாய்ப்பு உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உணவோடு ஒட்டாது என்பதால், இந்த வகை பாத்திரங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கவே செய்கிறது. இவ்வகை பாத்திரங்கள் சர்க்கரை நோய்க்கு வருவதற்கு காரணியாக இருக்கலாம் என்று கடந்தாண்டு ஸ்வீடன் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், ஆண்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இத்தாலி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் பெர்ஃப்லோரால்க்ல் (perfluoroalkyl) என்ற கெமிக்கலானது ஆணுறுப்பின் நீளத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் தரத்தையும் குறைக்கிறதாம். Journal of Clinical Endocrinology & Metabolism என்ற தளத்தில் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் வேறு வழியில்லாம நான் – ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன் படுத்துகிறீர்களா? கீழே உள்ள குறிப்புகளை படித்து, மனதில் பதித்துக் கொள்ளவும்.

* குறைந்த மிதமான சூடு போதுமானது.

* சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.

* மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.

* உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.

* சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.

* கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

* மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.

* நான் – ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.

* பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில், ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.