February 4, 2023

இசைஞானிக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்குமான பின்னணி!- முழு ரிப்போர்ட்!

சென்னை கோலிவுட்டின் லேண்ட் மார்க்-குகளில் ஒன்றாகி இன்றும் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் தான் பயன்படுத்திய ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளவும், ஸ்டியோவுக்குள் தியானம் மேற்கொள்ளவும் தன்னை அனுமதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு உதவியாளர், ஒரு இசைக் கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்ற நிபந்தனையை ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளையராஜா தரப்பில், பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன் என்றும் தனது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்வேன் என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜா செல்ல ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

மேலும், இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும்போது அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை கவனிக்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் ஆணையராக செயல்படுவார் என ஐகோர்ட் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இசைஞானி இந்த பிரசாத் ஸ்டுடியோ-வில் குடி புகுந்த கதையே சுவையானது. அது என்ன வென்றால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவிலும், கே.ஜே.யேசு தாஸின் கோதண்டபாணி ஸ்டுடியோவிலும் மாறி மாறி பாடல் பதிவு செய்தார். யேசுதாஸ் முதன் முதலில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இசைக்கருவிகளை வைத்து உருவாக்கிய ஸ்டுடியோ கோதண்டபாணி ஸ்டுடியோ. (ஆவிச்சி பள்ளி எதிரில் இருந்தது. இப்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது.)

ஒருநாள் பிரியா படத்திற்கான பாடல் பதிவு நடத்த வேண்டிய அவசரம் ராஜாவுக்கு. ஏவி.எம்மில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துக் கொண்டிருந்தார். பிரசாத் ஸ்டுடியோவை இளைய ராஜாவின் குருவான ஜி.கே.வெங்கடேஷ் ஆக்ரமித்திருந்தார். இன்று எங்கே இசையமைப்பது என்ற நிலையில் கோதண்டபானி ஸ்டுடியோவைப் பற்றி கேள்விபட்டு அங்கு பிரியா படத்தின் பாடல்களை பதிவு செய்தார். உயர்தரகருவிகளை பாடல் பதிவு செய்ததால்தான் இன்று வரை பிரியா படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருக்கிறது.

ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்தபோது குடிப்பழக்கத்திற்கு எதிராக ஒரு படத்தை அரசு சார்பாக எடுக்க திட்டமிட்டார். ‘நீங்க நல்லாயிருக்கணும்‘ என்ற பெயரில் ஒரு படத்தை தொடங்கினார். படத்திற்கு இசை இளையராஜா தான். படத்தின் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. முதல்வர் கலந்து கொள்ளும் விழா என்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. வி.ஐ.பி.-க்கள் கார்கள் சோதனையிடப்பட்டு, ஏ.வி.,எம். வாசலிலிருந்து ஸ்டுடியோ உள்ளே வரை நடந்து செல்வதற்கே அனுமதிக்கப்பட்டனர். அப்போது, இளையராஜா கார் உள்ளே வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜாவை நடந்து செல்லவேண்டும் என்று சொல்ல, ‘இது என்னுடைய கோட்டை. என்னை நடந்து போகச்சொல்கிறீர்களா” என்று கோபமாக கேட்டு விட்டு காரை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு அந்த விழாவைப் புறக்கணித்து விட்டார்.

இதன் பிறகு அந்த ஏவி.எம்.ஸ்டுடியோவிற்கு வருவதையே தவிர்த்து விட்டார். அதே சமயம் தனக்கென்று ஒரு ஸ்டுடியோவை உருவாக்க இளையராஜாவுக்கு ஆசை வந்தது. இதற்காக ஜெர்மனி சென்று இசைக்கருவிகளை வாங்கி வந்து விட்டார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் அந்தக் கருவிகளுக்கான சுங்கக்கட்டணம் கட்டுமாறு இளையராஜாவிடம் சொன்னபோது அதிர்ந்து போனார். காரணம் அந்தத்தொகை அவர் வாங்கிய கருவிகளின் விலையைவிட மிக அதிகமாக இருந்தது தான். அப்போதுகூட சிலர் தமிழக எம்.பி.-க்களிடம் சொன்னால் இது எளிதாக சரியாகி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இளைய ராஜா இதற்காக யாரிடமும் போய் நிற்க விரும்பவில்லை. வாங்கிய கருவிகளை அப்படியே விமான நிலையத்தில் விட்டுவிட்டு விட்டிற்கு வந்து விட்டார். இதன் மூலம் அவரது ‘ரெக்கார்டிங் தியேட்டர்’ ஆசையை மூட்டைக் கட்டி வைத்து விட்டார்.

இந்த பிபரங்கள் எல்லாம் கேள்விபட்ட எல்.வி., பிரசாத் தனது ஸ்டுடியோவை பயன்படுத்திக் கொள்ளுமாறு இளையராஜாவை நேரில் சந்தித்துக் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை இளையராஜாவும் பயன்படுத்திக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை பிரசாத் ஸ்டுடியோ அவரது அடையாளமாகிப்போனது. எ.வி.பிரசாத் மறைவதற்கு முன்பு தனது மகன்களிடம் “இளையராஜா இருக்கும் வரைக்கும் அந்த ஸ்டுடியோவிலிருந்து அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது” என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார். அதன்படியே அவரது வாரிசுகளும் இளையராஜாவிற்கு முன்னுரிமை கொடுத்து அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தனர். சில ஆண்டுகளாக இளையராஜாவிற்குப் படங்கள் குறைந்த போதும், அவருக்காக நியமிக்கப்பட்ட வேலையாட்களுக்கு சம்பளத்தை ஸ்டுடியோ நிர்வாகமே கொடுத்து வந்தது.

ஆனால் எல்லாத்துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், பிரசாத் நிர்வாகத்திற்கு ஆடியோ பிரிவை மூட வேண்டிய நிலை வந்திருக்கிறது. இதனால் பல பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு பழமையான பிரமாண்ட ஸ்டுடியோக்களை நிர்வகிக்க பெரும் செலவு பிடிப்பதால் அதை நவீன வடிவத்திற்கு மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதை பக்குவமாக இளையராஜாவிடம் சொல்லி அனுமதி கேட்க, அவர் நான் இருக்கும் வரை ஸ்டுடியோவிற்கு உங்களுக்கு எவ்வளவு வாடகை என்று சொல்லுங்கள் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதன்படி மாதம் ஆறு லட்சம் ரூபாய் தர முடிவானது. இனி இசையமைப்பு நடக்கும் போது சவுண்ட் இன்ஜினியர், மின் கட்டணம் எல்லாம் இளையராஜாவே செலுத்த வேண்டியிருக்கும். அந்த பிரமாண்ட கட்டிடத்தில் எந்தமாற்றமும் செய்யாமல் இருக்க பிரசாத் நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.

இதன் மூலம் பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு, சொந்த ஸ்டூடியோ ஒன்றை நிர்வகிக்க வேண்டும் என்ற தன் தீரா  பூர்த்தி செய்து கொண்டார்  இசைஞானி இளையராஜா. தம் இவ்வளவு வாடகை என ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. மெயிலில் ஒப்பந்தத்தை அனுப்பியிருக்கிறார்கள். `பிரின்ட் எடுத்துக்கொண்டு வாருங்கள்; கையெழுத்துப் போட்டு விடலாம்” என்று கூறியிருக்கிறது இளையராஜா தரப்பு. ஆனால், ஐந்து நாள்கள் கழித்து வந்த சாய் பிரசாத், “நாங்கள் இந்த இடத்தை இனி கொடுப்பதாக இல்லை. காலிசெய்யுங்கள். நான் இளையராஜா சாரைப் பார்க்கணும்” எனச் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் இளையராஜாவைச் சந்தித்து அவரிடம் இடத்தைக் காலி செய்யச் சொல்லியிருக்கிறார் சாய் பிரசாத். அதற்கு இளையராஜா “நான் 40 வருஷமா இங்கதான் இருக்கேன். ஒரு நாள்ல 20 மணி நேரம் கூட இங்கே இருந்திருக்கேன். என் குடும்பத்துடன் இருந்த நேரத்தைவிட இந்த ஸ்டூடியோவில் இருந்த நேரம்தான் அதிகம். திடீர்னு நீங்க காலி பண்ணுங்கனு சொல்றது சரியில்லை. நாங்கதான் நீங்க கேட்குற வாடகையைத் தர்றோம்னு சொல்லிட்டோமே. அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு சாய் பிரசாத் முறையான பதில் சொல்லாமல், “இந்த இடம் எங்களுக்கு வேண்டும். இதை வேறு மாதிரி மாற்றப்போகிறோம்” என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு, மூன்று முறை வந்து இளையராஜாவை காலி பண்ணச் சொல்லியிருக்கிறது பிரசாத் ஸ்டூடியோ தரப்பு. ஆனால், இளையராஜா தரப்பு காலி செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறது. ஆனால், அடுத்த இரண்டாவது நாள் இரவோடு இரவாக நிறைய மேஜை – நாற்காலிகள், கம்ப்யூட்டர்களை இளையராஜா ஸ்டூடியோவுக்குள் கொண்டுவந்து வைத்து விட்டு “நாளையிலிருந்து எங்கள் ஆட்கள் இங்கேதான் வேலை செய்யப்போகிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது நிர்வாகம். இதனால் கோபமடைந்த இளையராஜா, தங்களின் வேலைக்கு இடையூறு செய்வதாகவும், அந்த இடத்திலேயே வேலை செய்ய அனுமதி வழங்கக்கோரியும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராஜாவுக்காக சில பல இயக்குநர்கள் போராட்டமெல்லாம் நடத்தி ஓய்ந்த நிலையில் ஐகோர்ட் இப்போது ராஜா-வுக்கு ஒரு நாள் எண்ட்ரி கொடுத்திருக்கிறது..

இதுதான் காலத்தின் கோலம்!