Exclusive

மாடுபிடி வீரர் மரணமும் ; உணர்ச்சிப் பிழம்புகளும்..!

கப்பட்ட கடும் தடைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொங்கல் தோறும் பல ஊர்களில் நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வீரம், பாரம்பரிய விளையாட்டு என்ற வழக்கமான விஷயங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தற்போதைய பிரச்சனைக்குள் நுழைவோம். மாடுபிடி வீரர் மரணம் அடைந்ததும் உடனே வழக்கம் போல ஒரு தரப்பு, வீரவணக்கம் என்று மரியாதை செலுத்துகிறது. இன்னொரு தரப்பு, உயிரைப் போக்கும் இந்த அபாயகரமான விளையாட்டு தேவையா என்று கேட்கிறது. ஆயிரம் இருந்தாலும் உயிரை பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வலி மற்றவர்களுக்கு புரியுமா என்பதே இவர்களின் உச்சபட்ச கேள்வி. இதற்கு நடுவில் இன்னொரு தரப்பு, எந்த விஷயத்தில் தான் மரண அபாயம் இல்லை? சாலையில் நடந்து போவதில் கூட தான் இருக்கிறது என்கிறது.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது உள்பட மனித வாழ்வில் ஏராளமான திமிர் தனமான காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட திமிர்த்தனங்களில் ஒன்றாக, ஜல்லிக்கட்டு விளையாட்டை கருதி விட முடியாது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு விதவிதமான பெயர்களில் காளைகளை அடக்குதல் நடக்கிறது. சிராவயல் போன்ற இடங்களில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காலைக்கும் அதனை அடக்க நினைக்கும் இளைஞர் களுக்கும் நிலப்பரப்பு எல்லை மிகப்பெரியது. இருதருப்பும் அங்கே நீண்ட நேரம் தனது பலத்தைக் காட்ட அதிக வாய்ப்பு. ஜல்லிக்கட்டு விளையாட்டில், யாருக்கு வெற்றி என்பது குறுகிய நிலப்பரப்பில் குறுகிய நேரத்தில் எல்லாமே முடிந்து விடும் . ஜல்லிக்கட்டை பொறுத்தவரை பண்டைய காலத்திற்கும் ஒரு இருபது ஆண்டு காலத்திற்கு முந்தைய ஜல்லிக்கட்டுக்குமநிறைய வித்தியாசங்கள் உண்டு. அதிலும் சமீபத்திய கால ஜல்லிக் கட்டுகளுக்கு இடையே வித்தியாசங்கள் என்பதை விட மாற்றங்கள் அதிகம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை விவரிக்கும் முன்பு சில விஷயங்கள் இங்கே தெளிவுபடுத்தி ஆக வேண்டும்.

உதாரணத்திற்கு பலருக்கும் தெரிந்த கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொள்வோம். 60-70 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் கால்களில் பேடு, அந்தரங்க உறுப்பை காக்க காட் அணிவார்கள். தலைக்கு ஹெல்மெட் என்பதெல்லாம் கிடையாது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை க்கான ஏற்பாடுகள் இவ்வளவுதான். பின்னாளில் வேகப்பந்து வீச்சில் சில கிரிக்கெட் வீரர்கள் தலையில் அடிபட்டு அடுத்தடுத்து இறந்து போனார்கள். ஆனாலும் கிரிக்கெட்டை கண்டு யாரும் பயப்படவில்லை, வெறுக்கவும் இல்லை. மாறாக பேட்ஸ்மேன்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் தான் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இன்று தலைக்கு ஹெல்மெட் அணியாத பேட்ஸ்மேன் ஒருவரையும் பார்க்க முடிவதில்லை. அது மட்டுமின்றி கை கால் மார்பு என எங்கெல்லாம் என்ன மாதிரியான பாதுகாப்பு உபகரணங்களை அணிய முடியுமோ அவ்வளவும் அணிகிறார்கள்.

சர்வதேச அளவிலான கார் மற்றும் டூவீலர் பந்தயங்களை பாருங்கள். எவ்வளவு தூரம் தூக்கி வீசப்பட்டு விழுந்து உருண்டாலும் பெரிய அளவில் காயமென்று தப்பிக்கிறார்கள். அது போன்ற பந்தயங்கள் விபத்தின் தன்மையில் பத்தில் ஒரு பங்கு அளவு வீரியம் குறைந்த விபத்து ஏற்பட்டால் கூட சாதாரணமான சாலை பயணத்தில் உயிர் பிழைக்கவே முடியாது. மிக மிக விலை உயர்ந்த உயர்ந்த கார்களில் ஆடம்பரங்களை தாண்டி பெரிதும் கவனத்தில் கொள்ளப்படுவது பாதுகாப்பு அம்சங்களே.

இப்போது மீண்டும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு வருவோம். முன்பு வாடிவாசல் திறந்ததும் மாடுகளை பிடிக்க வீரர்கள் அலை மோதுவார்கள் பார்வையாளர்கள் கூட்டமும் எந்தவித தடையே இல்லாமல் அவர்களை சூழ்ந்து இருக்கும். நெரிசல் அதிகமாகி பார்வையாளர்கள் மாடுபிடி களத்துக்குள் விழலாம் அல்லது மாடுகளும் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து காயங்களை ஏற்படுத்தலாம். ஆனால் இப்போது? பார்வையாளர்கள் பாதுகாக்கப்படும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு விடுகின்றன. மாடுகளை ஆக்ரோஷத்துடன் பாய வெளியேற்றுவதற்காக செய்யப்பட்டு வந்த சட்ட விரோத காரியங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அப்படி இருந்தும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் மரணம் என்ற அசம்பாவிதத்தை தடுக்க முடியவில்லை. இதற்காக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக முழுமையாக பொங்கத் தேவை இல்லை. ஜல்லிக்கட்டை இன்னும் எந்தெந்த அளவில் மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டுமோ அதைப் பற்றி தான் யோசிக்க வேண்டும். முதலில் மாடுபிடி வீரர்களான பாதுகாப்பு விஷயங்களில், விரிவான கவனம் கொள்ள வேண்டும். காளைகளைப் பிடிக்கும் போது எத்தகைய தாக்குதல்களால் வீரர்களுக்கு காயம் அதிகமாக ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நவீன உடைகளையும் உபகரணங்களையும் அவர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். குறிப்பாக தொடைக்கு மேல் இருந்து தலைப்பகுதிவரை பாதுகாப்பு அம்சங்களால் பிரத்யோகமாக பாதுகாக்க வேண்டும். 100% முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அபாயகரமான விளையாட்டுகளை எதிர்கொண்டாலும், எதிர்பாராத நிகழ்வுகள் சில சமயம் நடந்து விடும். அது போன்ற தருணங்களில் பாதிக்கப்பட்டோருக்கான பேருதவி என்பது மிகவும் முக்கியமான விஷயம். கணிசமான தொகை காப்பீடு என்பது இங்கே மிக மிக அவசியம்.

இன்னும் கூட மாற்ற வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஜல்லிக்கட்டில் வீரம் என்பதை தாண்டி, போலி கௌரவம், வீம்பு, விதவிதமான வெறித்தனங்கள் என திரை மறைவில் உள்ள விஷயங்கள் பலப்பல. குறிப்பாக,” இது என் மாடு, நாங்கள் இப்படிப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர்கள், அப்படிப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர்கள், எங்கள் மாடுகளைப் பிடிக்க எவனும் பிறக்கவில்லை” என்று உதார் விடும்தனம் என, ஏராளமான எதிர்மறை விஷயங்கள். அவங்க பெரிய குடும்பம் அவங்களோட மாட்டின் மீதெல்லாம் கைவைத்து அனாவசியமாக வம்பை இழுத்துக் கொண்டு வராதீர்கள் என்று ஆங்காங்கே நடக்கும் போதனைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் திரை மறைவில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை.
சாதி, அரசியல் உட்பட பல்வேறு விதங்களில் மிக மிக செல்வாக்கு பொருந்தியவரின் மாடு என்று அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படும் காளையைத் தொட பெரும்பாலானோர் அஞ்சுவார்கள்.

அங்கே தைரியமாக அடக்கி விடலாம் ஆனால் அதன் பிறகு எங்கே எப்போது என்ன ரூபத்தில் வில்லங்கம் வந்து முளைக்கும் என்பது கரைகண்டு நுரைதள்ளிய அனுபவசாலிகளுக்கு மட்டுமே தெரியும் . இது போன்ற விஷயங்களை முடிவுக்கு கொண்டு வர, காளையின் உரிமையாளர் பெயரை ஜல்லிக்கட்டுக்கு முன்பாக அறிவிக்கும் போக்கை கைவிட வேண்டும். ஜல்லிக்கட்டு முடிவில் தான் காளையின் உரிமையாளர் பெயரை அறிவிக்க வேண்டும்.அதற்கு முன்பு அந்த காளைக்கு வெறும் நம்பர் மட்டுமே அடையாளமாக கொடுக்கப்பட வேண்டும். இப்படி இன்னும் போக வேண்டியது வெகு தூரம்.

ஏழுமலை வெங்கடேசன்

aanthai

Recent Posts

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

3 hours ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

1 day ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

1 day ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

1 day ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

1 day ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

1 day ago

This website uses cookies.