சீனா ஆப்ஸ் களுக்கு மாற்றான ஆப்ஸ்- களின் பட்டியல்!
இந்தியாவில் மட்டும்……
முப்பது கோடி பேர் உபயோகித்த டிக்டாக்…..
நாற்பது கோடி சப்ஸ்ரைபர்கள் இருந்த கேம் ஸ்கேன்னர்…..
45 கோடி பேர் பயன்படுத்திய ஷேர் இட்
11 கோடி பேர் உபயோகித்த யூஸீ ப்ரௌசர்…..
இவைகளின் வியாபாரங்கள் மட்டுமே ₹25000 கோடிகள்… (இதை விட அதிகமாக இருக்கலாம்…..
வியாபார விபரங்கள் தேடிக் கொண்டு இருக்கிறேன்)…. எல்லாம் விளம்பரக் கட்டணங்கள் வழியாக…..!
இத்தனை வியாபாரமும் ஒரே நாளில் முடக்கியதால் நாளை காலை கிழக்கு நாடுகளில் தாக்கத்தையும், இன்றிரவே நாஷ்டாக், நாஸ்காம் எப்படி எதிர்வினையாற்றும் என்பதிலிருந்து இந்தியாவின் முடிவு நல்லதா என்பதை உணரலாம்….
ஒரு மொபைல் ஆப்பினால் இத்தனை வருமானமா என நினைக்க வேண்டாம்…. நம்ம ஊரில் நெல், கரும்புக்குத்தான் விலை நிர்ணயம் செய்ய முடியாது… ஆனால் மற்ற வியாபாரங்களில் விலையை உரிமையாளரே தீர்மானிக்கிறார்….. பாவம் விவசாயிகள்….
இந்தியாவின் இந்த ஆப்புக்கு ஆப்பு யாருக்கு ஆப்பு என விரைவில் தெரிந்து விடும்!…
(சில மாற்று ஆப்களை பரிந்துரை செய்து இருக்கிறேன். இது எனக்கு வாட்ஸ்அப்பில் வரப் பெற்றது……)
1. யூசி பிரௌசர் (uc browser)
யூசி பிரௌசர் (uc browser) இந்தியா மற்றும் சீனாவில் அதிக நபர்கள் பயன்படுத்துவது யூசி பிரௌசர் அதற்கு பதிலாக கூகுள் குரோம் (google chrome) மொசில்லா பயர்பாக்ஸ்(mozilla firefox) பயன்படுத்தலாம் மொசில்லா பயர்பாக்சில் இன்பில்ட் விபிஎன்(VPN) போன்ற வசதிகள் உள்ளது.
2.ஷேரிட் (share it), எக்ஸ் என்டர் ( xender)
ஷேரிட் , எக்ஸ் என்டர் பைல்களை ட்ரான்ஸ்பர் செய்ய பயன்படுத்தும் ஆப்ஸ்கள் ஷேரிட் மற்றும் எக்ஸ் என்டர் பதிலாக ஐஓஎஸ்(IOS) பயனாளர்கள் ஐஓஎஸ் டோ ஐஓஎஸ் அண்ட்ராப் வசதி பயன்படுத்தலாம். மற்றவர்கள் கூகுள் பைல்ஸ் கோ (google files go) பயன்படுத்தலாம் .
3.கேம்ஸ்கேனர்(cam scanner)
பைல்களை ஸ்கேன் செய்ய மாணவர்கள் ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்துவது கேம்ஸ்கேனர் (cam scanner) அதற்கு பதிலாக மைக்ரோசாஃப்ட் லென்ஸ் (microsoft lens) மற்றும் அடோம் ஸ்கேனர்(adobe scanner) பயன்படுத்தலாம்.
4. ஹலோ(helo) மற்றும் லைக்(likee)
நடுத்தர வயதினர் அதிகம் பயன்படுத்தும் ஹலோ மற்றும் லைக் ஆப்ஸ்க்கு பதிலாக இந்திய தயாரிப்பு ஷேர் சாட் (sharechat) உள்ளது.
5. யூ கேம்(you cam), பியூட்டி பிளஸ்(beauty plus)
யூ கேம்(you cam) ,பியூட்டி பிளஸ் (beauty plus),ஒண்டெர் கேமரா(wonder camera), போட்டோ ஒண்டர்(photo wonder), ஸ்வீட் செல்பி (sweet selfie) போன்ற ஆப்ஸ் பயன்படுத்தியவர்களுக்கு ஸ்னாப்ஷாட்(snapchat), ஜி கேம் (G cam)சிறந்த மாற்றாக இருக்கும்.
6. செயின்(shein),கிளப் ஃபேக்டரி(club factory)
. செயின்,கிளப் ஃபேக்டரி பொருள்கள் வாங்கி பழக்கப்பட்டவர்கள் மித்ரா(myntra), பிலிப்கார்ட்(flipkart), ஸ்னாப்டீல்(snapdeal) பயன்படுத்தலாம்.
7. டிக் டாக் (tiktok)
இந்தியாவில் 12 கோடி டிக் டாக்(tiktok) பயனாளர்கள் இருக்கின்றனர். டிக் டாக் செயலி மாற்றாக மித்திரன்(mitron app) மற்றும் சிங்காரி(chingari app) போன்ற இந்திய செயலிகள் உள்ளது ஆனால் இவை டிக் டாக் அளவிற்கு வசதிகள் கொண்ட ஆப்ஸ் கிடையாது பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் விரைவில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. பில்லர் (triller app) என்ற அமெரிக்க செயலையும் டிக் டாக் பதிலாக பயன்படுத்தலாம்.
8. டியூ பிரைவசி(du privacy), கிளீன் மாஸ்டர்(clean master) கிளீனர் பேட்டரி சேவர் (cleaner battery saver)
டியூ பிரைவசி(du privacy), கிளீன் மாஸ்டர்(clean master) கிளீனர் பேட்டரி சேவர் (cleaner battery saver) போன்றவைகளுக்கு பதில் வேறு எதுவும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.