December 5, 2021

அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் :அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்!

தினமும் ஊரடங்கு தளர்த்ப்பட்ட நேரங்களில் எல்லாம் நட்பு வட்டத்தின் வீட்டுக் செல்வது வழக்கம். அங்கே அனைத்துக் குழந்தைகளின் கைகளிலும் இணைய இணைப்புள்ள திறன் பேசி காதிலிட்டுச் செருகப்ட்ட ஒலி வாங்கி என ஒரே போல அமர்ந்துள்ளனர். சட்டென குனிந்து குறிப்புகள் எடுக்கிறார்கள். அடுத்த 2 மணி நேரத்தில் விநாடி – விநா (குவிஸ்) சிறிது நேரத்தில் தேர்வு.. அமர்ந்திருந்த யாருக்கும் வகுப்பு குறித்தோ அன்றி கேள்வி பதிலில் எழுதுகிறோமே என எவ்வித அச்சமும் இல்லை..ஒரு மருத்துவம் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவரும், பொறியில் கற்கும் மாணவ மாணவர்களும் அடக்கம்.

TOEFLE, GRE போன்றவையும் அழகாகப் பதட்டமின்றி இவ்வகைத் தேர்வினுக்கான பயற்சினை மேற்கொள்ள உதவுகிறது.“கூகுள் கிளாஸ்”, “ஷூம்” “யூட்யூப்” போன்ற பல்வேறு செயலிகள் இந்தப் பயன் பாட்டிற்கு முன்பே உபேயோகத்திற்கு வந்தவிட்டன. கெரானோ தந்த ஆக்கப் பூர்வமான வினை இது. இந்தத் தொழில்நுட்ப வளர் பரிமாணங்கள் கல்வியறைகளை அடுத்தத் தளத்திற்கு நகர்த்தப் போகின்றன, இன்னொரு பத்தாண்டுகளில் கூகுளும், அமேசான் அமைப்பும், மைக்ரோசாஃப்ட், ஐ.பி.எம். ஆப்பிள் போன்ற தலைசிறந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பமே. இந்த ஐந்த நிறுவனங்களுமே தாங்களே இவற்றை உருவாக்கிட வில்லை. தளையற்ற மென்பொருள் (Open Source) வடிவமைத்த இலட்சோப இலட்சம் தனியர்களின் கூட்டு இயக்கத்தால் நிகழ்ந்தது. தனியர்கள் வடிவமைத்த மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, எழுத்துணரி (OCR) போன்றவையன்றி இன்ன பிற யாவும் தனியர்கள் உருவாக்கியதுதான. அவற்றை மேற்சொன்ன அமைப்புகள் வாங்கிப் பயன்படுத்தினார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். ஒரு வார இதழில் மென்பொருள் தொழில் நுட்பம் அடுத்த போக்கு எப்படி எனக் கேட்டுவிட்டு முதல் பதிலே வெறும் தேடுபொறியான கூகுள் விழுந்து விடும். மற்றயவைகளைப் போல ஏனைய கட்டுமான வளர்சி கூகுளிடம் இல்லை என்ற குற்றச்சாட்டுடன் அந்த வார முடிவுகளாக வெளியிட்டிருந்தது. அந்தத் தொடரை எழுதியவர் அமெரிக்க மென்பொருள் துறையின் எதிர்காலவியல் ஆய்வாளர் (Futorologist). அப்படியான கூகுள் எப்படி எழுந்து மிகு மெதுவாக அதீதத் தரவுத் தேடல் வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மென்பொருள் மேம்பாடு. அதை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கான சிறு கருவிகளை நுழைத்தது முதல் படி.

பயனாளரின் தேவைக்கேற்ப உடனடியாக அவர்களுக்கு அதை வழங்குவதையும் அல்லது வழங்கிட வாய்ப்பு ஏற்படுத்தித் தருதலையும் கூகுளின் ஹை கூகுளும் அமேசானின் அலெக்ஸா கருவிகளும் உடனே செய்து தருகின்றன தங்களின் உள்அடக்கம் வழங்கிடும் தொடர் இணைப்பை (Content Delivery Network – CDN)மிகத் தீவிரமாக உருவாக்கி விரிவாக்கி வைத்துள்ளனர்.

இந்த அமைப்பு எந்தளவு மாற்றம் செய்திட இயலும் என்பதை ஒரு மின்மடலில் பார்த்தேன். இதோ உங்கள் பார்வைக்கு

இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது. கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.. புரியும்.

அதாவது 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ?? நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்…!

1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?? எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

எதனால ?

ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா ‘Software’ என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா…சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, ‘Bharat Matrimony‘ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக் கொடுக்குது… கமிஷனோட…! இல்லீங்களா..?

‘Uber’ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது…!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது…என்ன பண்றதுனு தெரியலை..!என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க.!..   சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா…!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக் கிட்டு தானே போகணும்…! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும். IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது…! அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax, taxman போன்ற இணையதளம்!,
டாக்டர்கள் வேலையை Ada app!,
ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr,  99acres, இணையதளம்!,
கார் விற்பனையை carwale, cars24 இணையதளம் ! என சேவை இலவசமாக தருகின்றன.
UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.
ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் சந்தைக்கு வந்தபின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது.
இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.
80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். ‘Subject Matter Experts’னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்…!

ஆக.,2025ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும். 2019 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது. அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா…ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்:

யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. ‘Driving License’ என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ்டு கால்.. இல்ல..SMS…! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு அழகாகக் கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா…அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். ‘Accident’ ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில ‘கார் பார்க்கிங்’காக மட்டுமே ஆக்ரமிக்கப் பட்டு இருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும். Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க… இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள். ‘BitCoin’ னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க…! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும். விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

‘Moodies’ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது… 2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த சில ஆண்டுகளில் மார்கெட்க்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op – ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

இதே போல் கொரானோவுக்கு ஒரே செயலியின் வழியாக செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தி உங்கள் திறன்பேசி முன் இருமிக் காட்டினால் உங்கள் குரல் பதிவு வழியாகவே உங்களுக்குக் கொரானோ பாதிப்புள்ளதா இல்லையா என ஒருநிமிடத்தில் பதிலளிக்கும் செயலி வந்து விட்டது. ஆய்வகம் இனி வெளிவிடத்தான் காத்திருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

சந்திக்க தயாராவோம். எதிர்காலம் நம் கையில் இல்லை.

கடந்த காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருக்கப் போகிறது என்கிறீர்களா?

அதுவும் சரிதான்…

சிரித்துக் கடத்தல் மட்டுமே மாற்று…

ராமசாமி துரைபாண்டி