ஸ்மோக் பண்றீங்களா? அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்!

ஸ்மோக் பண்றீங்களா? அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்!

புகை பிடிப்போர் ஒவ்வொருவரும், ஒரு தடவை புகை பிடிக்கும் போது மட்டும் தன்னுடைய வாழ் நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததைக் கண்டு கொள்ளாத நிலையில் இப்படி புகை பிடிப்பவர் களுக்கு ஆணுறுப்பு சிறிதாகும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி புது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

சர்வதேசம் முழுக்க 110 கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர். இதில் 50 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர். இதில் ஏறத்தாழ 9 லட்சம் பேர், புகைப்பவரின் அருகிலிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள். சாதாரணமாக 51 லட்சம் ஆண்களும், 20 லட்சம் பெண்களும் புகைக்கு அடிமையாகி, உயிரிழக்கிறார்கள். இதை எல்லாம் தெரிந்தாலும் நம் நாட்டில் புகை பிடிப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றனர். புகை பிடித்தல் உடலுக்கு கேடுவிளைவிக்கும் என எவ்வளவு விளம்பரம் செய்தாலும் அவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில் உலகின் பிரபல யூராலஜி டாக்டரான மார்க் லெனஜிடோ சமீபத்தில் அளித்த பேட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விவரித்த போது ” ஆண்களுக்கு விரைப்பு தன்மையின்மை என்பது மிக முக்கிய மான பிரச்சனையாக இருக்கிறது. இதை சரி செய்வது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பது இல்லை. ஆணுப்பில் ரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் மட்டுமே விரைப்பு தன்மை ஏற்படும். புகைபிடிப்பவர்களுக்கு ரத்தம் ஓடும்பாதைகளில் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. அதனால் ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் குறைகிறது.

சிகரெட்களில் உள்ள நிக்கோட்டின் ரத்த குழாயை சிறிதாக்குகிறது இதனாலும் கூட ரத்த ஓட்டம் பாதிக்கிறது. இது பெரும்பாலும் தற்காலிகமாகவும், வெகு சில நேரங்களில் நிரந்தரமாகவும் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது. ரத்தகுழாய் சிறிதாக இருந்தால் ரத்த ஓட்டத்தின் அளவு குறையும் இதனால் விரைப்பு தன்மை குறையலாம். இது மட்டும்மல்ல இது ஆணுறுப்பை சிறிதாக்கும் அபாயமும் இருக்கிறது.

அதிக புகைபழக்கம் இருப்பவர்களுக்கு உடலுறவின் போது நீங்கள் எதிர்பார்க்கும் விரைப்பு தன்மை இல்லாமல் போகலாம் அல்லது விரைப்பு தன்மையே இல்லாமல் போகலாம். இதே போல தன் பெண்களுக்கும், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்தி இல்லாமல் இருக்கும். அல்லது நீண்ட நேரம் செக்ஸை தொடர முடியாமல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

 

Related Posts

error: Content is protected !!