March 21, 2023

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக விரைவில் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம்!

சென்னையில் ஹைடெக் ட்ராவல் வாகனமாகி விட்ட நம்ம சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப் போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் செப்., வரை சென்னை மெட்ரோவில் 2.23 கோடி பேர் பயணித்ததாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த செப்., மாதத்தில் மட்டும் 31.89 லட்சம் பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!

சென்னையில் மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உரு வாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வரை பயணிகள் சேவை நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக் கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக புதிய ‘சிப்’ பொருத்திய கைக் கடிகாரத்தை ‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் எளிதில் வந்து செல்ல முடியும். நுழைவு பாதையில் உள்ள மிஷினில் கைக் கடிகாரத்தை காண்பித்தால் தானாக கதவு திறக்கும். இந்த கடிகாரத்தின் விலை ரூ. 1,000 என நிர்ணயிக்கப்படவுள்ளது.

தற்போது டெல்லியில் மெட்ரோ பயன்படுத்தும் நபர்கள், டெல்லி மெட்ரோவால் அளிக்கப்படும் ஸ்மார்ட் அட்டையை கொண்டு எளிதாக பயணம் செய்து வருகின்றனர். இந்த அட்டையை பயன்படுத்துபவர் டிக்கெட் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை., மெட்ரோ நுழைவு வாயிலில் சென்று அட்டையை காண்பித்தால் போது, வழித்தடம் தானாக திறந்துவிடும். இந்நிலையில் இவ்வாறான செயல்முறையை சென்னை மெட்ரோ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.