சென்னையில் 17-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்ட் கிடைக்கும்!

சென்னையில் 17-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்ட் கிடைக்கும்!

தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சம் குடும்பத்தினர் ரேசன் கார்டுகள் மூலம் பொது வினியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள். பொது வினியோக திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க ரேசன் கார்டுக்கு பதிலாக புதிதாக ‘ஸ்மார்ட் கார்ட்’ எனும் மின்னணு குடும்ப அட்டை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

smart card apr 12

இதன்படி மாநிலம் முழுவதும் ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி 99 சதவீதம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டன.கடந்த 1-ந் தேதி ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆர்.கே.நகர் தேர்தல் காரணமாக சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 17-ந் தேதி முதல் சென்னை நகரில் ‘ஸ்மார்ட் கார்டு’ கிடைக்கும் என்று சிவில் சப்ளை துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை நகரில் மொத்தம் 20.1 லட்சம் ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் உள்ள 83.5 லட்சம் பயனாளிகளில் 59.5 லட்சம் பேர் தான் ஆதார் என்ணை இணைத்துள்ளனர். ரேசன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ந் தேதியுடன் முடிகிறது. 64 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் மாநிலம் முழுவதும் இதுவரை 35 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

2 மாதங்களுக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் முயற்சியில் சிவில் சப்ளை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

error: Content is protected !!