“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க? இதோ விபரம்!

“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க? இதோ விபரம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ‘இதயம் முரளி’-யாக கேமியோ ரோலில் நடிகர் வைபவ் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ‘சிக்ஸர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிக்ஸர் என்றாலும், இது கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் இல்லை. 6 என்ற எண் இந்த படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ரீதர் மற்றும் தினேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கி வரும் இப்படத்தில் வைபவ், சதீஷ், பலக் லால்வானி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வால்மேட் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இரவு நேரங்களில் கண் தெரியாத இளைஞனின் வாழ்வை காமெடியாக சொல்லும் திரைக்கதை யில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 30ல் ரிலீஸாக உள்ள “சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் RNR மனோகர்…

இயக்குனர் கதை சொல்லும்போதே வெகு சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்படத்தை தியேட்டரில் பார்ப்பவர்கள் கடைசி பாலில் 4அடித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் எனும் போது பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் எப்படி ஆர்பபரிப்பார்களோ, அப்படி ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

காமெடி(?) நடிகர் சதீஷ் பேசியபோது…

ஸ்கூல் போன ஞாபகம் வருகிறது. இங்கு எல்லோரும் பாய்ஸாக இருக்கிறோம். ஹிரோயினும் வரவில்லை. படம் அப்படியிருக்காது. “சிக்சர்” நாங்கள் நண்பர்களாக இணைந்து நல்ல படம் என்ற நம்பிக்கையில் எடுத்திருக்கிறோம். வைபவைவிட இளவரசு சாருக்கும் ஶ்ரீரஞ்சனி மேடத்திற்கும் நல்ல கெமிஸ்ட்ரி இப்படத்தில் இருந்தது. ராதாரவி சார் பாராட்டுவது திட்டுவது பொலவே இருக்கும். அவர் அட்டகாசமாக நடித்திருக்கிறார். இப்படம் நாங்கள் நன்றாக இருப்பதாக நம்புகிறோம். பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றார்.

ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியது…

நான் மதுரை வீரன் முடித்தபோது தயாரிப்பாளர் கூப்பிட்டார். படம் இயக்க கூப்பிடுகிறார் என நினைத்துப் போனேன், ஆனால் ஒரு கதை கேளுங்கள் என்று இப்படத்தின் கதையை சொன்னார். அப்போது தான் ஒளிப்பதிவு செய்யக் கூப்பபிட்டுள்ளார் எனத் தெரியும். இந்தப்படத்தின் கதை அருமையாக இருந்தது. அதனால் என் கதையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப்படத்தை செய்தேன். எல்லோரும் எந்த ஈகோவும் இல்லாமல் தங்கள் படமாக நினைத்து வேலை செய்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோரும் பாருங்கள் பிடிக்கும் என்றார்.

நடிகர் இளவரசு பேசியது….

இந்தப்படத்திற்கு என்னை பேசியபோது தயாரிப்பாளர் என்றால் வேட்டி கட்டிய வயாதனவர் தோற்றத்தில் இருப்பார்கள் என நினைத்தேன் ஆனால் என் மகன் வயதில் இருவர் வந்து தயரிப்பாளர்கள் என்றார்கள். ஆனால் சினிமா பற்றி அனைத்தும் தெரிந்து வேலை செய்தார்கள் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என மனதார அப்போதே வாழ்த்தினேன். வைபவை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். நான் அப்பா கேரக்டரே செய்யக் கூடாது என்று இருந்தேன். ஆனால் இப்படத்தில் அப்பா கேரக்டர் நன்றாக இருந்தது. ஹிரோவுக்கும் அப்பாவுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் அது அழகாக இருந்தது என்றார்.

இதே மேடையில் பேசிய இயக்குநர் சாச்சி

இது காமெடிப்படம் ஆனால் அழுதுகொண்டே எடுத்தோம். அத்தனை கஷ்டப்பட்டிருக்கிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு என்ன கேட்டாலும் தந்தார்கள். அத்தனை சுதந்திரமாக இருக்க வைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு சகோரதரனாக பார்த்துக் கொண்டார்கள். அவரகள் தான் இந்தப்படம் நடக்க முழுக்காரணம். வைபவ் இந்தக்கதையை சொன்னபோது உடனடியாக ஒத்துக் கொண்டார். அவர் தான் தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தினார். சதீஷ் இருந்தால ஷூட்டிங் ஸ்பாட் ஜாலியாக இருக்கும். அத்தனை உற்சாகமாக அனைவரையும் வைத்துக் கொள்வார். ஒளிப்பதிவாளர் முத்தையா சார் ஒரு காதலி மாதிரி ஆகி விட்டார். 4மணி நேரம் எடுக்க வேண்டியதை 1/2 மணியில் முடித்து தந்தார். ஒரு அறிமுக இயக்குநருக்கு அவர் தந்த பலம் அளப்பரியது. இளவரசு சாரின் ஒத்துழைப்பு அபாரமானது. இதில் வில்லன் விஜய் மாஸாக இருப்பார். ஜிப்ரான் மிகப்பெரிய இசையமைப்பாளர் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். வைபவ் முழுப்படத்தையும் தன் நடிப்பால் தாங்கியிருக்கிறார். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நாயகன் வைபவ் பேசியது இதுதான் …

எல்லாருமே படத்தை பற்றி எல்லாவற்றையும் பேசி விட்டார்கள். தயாரிப்பாளர்கள் அனைத்தையும் திட்டமிட்டு செய்யும் இளைஞர்கள். படத்தை கவனத்துடன் செய்துள்ளார்கள். சிவகார்த்திகேயன் சார் ஒரு பாடல் பாடித்தந்தார் அவருக்கு நன்றி. இயக்குநரிடம்  ஏன் சார் சாச்சி எனப்பெயர் எனக் கேட்டேன் டைரக்டர் அட்லி அதேமாதிரி சாச்சி என்றார். படத்தை அட்டகாசமாக எடுத்திருக்கிறார் உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். பாருங்கள் என்றார்.

தயாரிப்பாளர் தினேஷ் பேசியது இதோ….

நானும் எனது நண்பனும் இணைந்து முதல் முறையாக உருவாக்கியுள்ள படம் சிக்சர். வைபவ் எனது மிக நெருங்கிய நண்பர்.  P G முத்தையா , ஜிப்ரான் இருவரும் மிகப்பெரிய ஆளுமைகள் எங்கள் படம்  பற்றி சொன்னவுடனே ஒத்துக்கொண்டு செய்ததற்கு நன்றி. ஜோமின் இப்படத்திற்கு பின் பெரிய உயரம் போவார். சாச்சி மிகப்பெரிய உழைப்பை தந்திருக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் இப்படத்தின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. மிகப்பெரிய படங்கள் செய்பவர்கள் எங்கள் படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நான் மரகதநாணயம், ராட்சசன் படங்களின் எக்ஸ்க்யூட்டிவ் புரடியூசர். எனது நண்பன் ஶ்ரீதருடன் நிறைய நாள் பேசிய பிறகு நிறைய திட்டமிடல்களுக்கு பிறகு உருவானது தான் இந்தப்படம். ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஶ்ரீதர் பேசியது இம்புட்டுதான்..

என் நண்பர் நான் சொல்லவேண்டியது எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். நான் சிவகார்த்திகேய னின் நண்பன் அவர் மூலம் சதீஷை தெரியும் அவர் இப்படத்தில் நடித்தது மகிழச்சி. தினேஷும் நானும் பல முறை விவாதித்து இந்தப்படத்தை உருவாக்கினோம். வைபவ் தனியாளாக இதில் கலக்கியிருக்கிறார். அனிருத் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஆகஸ்ட் 30ல் படம் வருகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

error: Content is protected !!