சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்!
இந்த தமிழ் சினிமா அம்மா- மகன் பாசம், அப்பா-மகள் பாசம், அண்ணன் – தங்கை பாசமென்று எத்தனையோ பாசங்களை பிழிய பிழியக் காட்டி இருக்கிறது. மேற்படி பாச வகைகளில் மிஸ்ஸான அக்கா வீட்டுகாரரான அத்தான் – மச்சான் உறவை வைத்து சிவப்பு மஞ்சள் பச்சை என்ற டைட்டி லில் புது டைப்பில் ஒரு கதையை கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் பிச்சைக்காரன் என்னும் ஹிட் கொடுத்த இயக்குநர் சசி .
ஜி.வி.பிரகாஷ் (மதன்) அடாவடியானவன், அன்பானவன், பணிவானவானன், வறட்டுப் பிடிவாதக் காரன் என்ற பல்குணம் கொண்ட சராசாரி இளைஞன். அப்பா, அம்மா இல்லாத அவனுக்கு ஒரு அக்கா லிஜோமோல் ஜோஸ் (ராஜ லட்சுமி)தான் உலகம். தம்பியை நெசமாகவே உயிராய் நேசிக்கும் அம்மாவுக்கு இணையாக, கூடவே ஒரு காதலியாக முள்ளில் பட்ட சேலை ரோலில் வாழும்
அக்காவுக்குத் தெரியாமல் ஜிவி பிரகாஷ் திருட்டுத்தனமாக பைக் ரேஸ் ஓட்டி டிராஃபிக் போலீஸ். சித்தார்த் (ராஜசேகர்)-டம் சிக்குகிறார். கடுமையாகப்பட போக்குவரஹ்து விதிகளை மீறிய மதனுக்குப் பாடம் புகட்ட நினைக்கும் எஸ்.ஐ. ராஜசேகர் நைட்டியை அணிவித்து மதனை காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார். அதை பொதுமக்கள் வீடியோவாக எடுக்க, சித்தார்த் ஒரு படி மேலே போ நைட்டி போட்ட பிரகாஷ்-சின் சீனரிகளை யூடியூபில் போட்டு விடுகிறாறார் ராஜசேகர்.
இதனால் சித்தார்த்தை நினைத்தாலே பற்றி எரியும் நெருப்பாகி போகிறார் ஜிவி பிரகாஷ். இதனி டையே அக்கா லிஜோமோல்-ஐ பெண் பார்க்க சித்தார்த் வந்து பேசுகிறார். கலயாணம் செய்து கொள்ளப் போகும் இருவருக்கும் பிடித்துப்போக, ஜி வி பிரகாஷூக்கு மட்டும் பிடிக்காமல் போகிறது. அதனால ஆசைத் தம்பிக்காக அந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று மறுக்கிறார் ராஜலட்சுமி. ஆனாலும் சித்தார்த் விடாமல் ராஜலட்சுமிக்கு தன் அன்பைப் புரியவைக்கிறார். இது தெரிந்து ஜிவி பிரகாஷ் மேலும் காண்டாகிறார். அதை அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த ட்ராஃபிக் சிக்னலில் உள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் கதை.
ஆரம்பத்தில் பிளேபாய்தனமாக கேர்ள்ஸ் பின்னாடி சுற்ரும் ரோல்களில் மட்டும் நடித்து பிழைப்பை ஓட்டி வந்தார் ஜி வி பிரகாஷ் அதே சமயம் தன்னை அறியாமல் நாச்சியார்,சர்வம் தாள மயம் மற்றும் இந்த சிவப்பு மஞ்சள் பச்சை படங்களிலும் கமிட் ஆகி கோலிவுட் குட் ஆக்டர் என்ற லிச்டில் இடம்பிடிக்க முயல்கிறார். இந்த படத்தில் தனக்கு தெரிந்த அத்தனை நடிப்பு வித்தையையும் காட்டி ஸ்கோர் செய்திருக்கிறார். சித்தார்த்தும் நேர்மையான போலீஸ் அதிகாரி, அன்பான காதலன், பாசக்கார மகன், என்று தேவையான நடிப்பை வழங்கித் தனிக் கவனம் பெறுகிறார். மெயின் ரோலில் வரும் லிஜோ மோல் ஜோஸ் பாசம், காதல், பிரிவு, வலி, குழப்பம், ஆசை என சகல உணர்வுகளையும் கண்களின் வழியாகவே காட்டி மிரட்டுகிறார். இனி இவரை நிறைய தமிழ் படங்களில் காணலாம். அத்தையாக வரும் யூ-ட்யூப் நக்கலைட்ஸ் புகழ் தனம் தன் ரோலுக்கு கனம் சேர்த்து விட்டார்.ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி ஓ கே.
கேமராவு, இசையும் படத்தை முழுசாக பார்க்க உதவுகிறது என்பதே விசேஷம்.. ஆனால் இடை வேளை வரை ரசிகனுக்கு பிடிக்கும் வரை ஸ்கீரின் பிளே செய்யும் பெரும்பாலான டைரக்டர்கள் செகண்ட் ஆஃப்-பில் சொத்தப்பி விடுவது போலவே சசியும் இப்படத்தில் செய்து விட்டார். எடுத்துக் கொண்ட பைக் ரேஸ் கொடூரம், ட்ராஃபிக் போலீசின் முக்கியத்துவம், குடும்ப உறவு இம்மூன்றை யும் அழகாக சொல்லிக் கொண்டு போனவர் திடீரென வில்ல கேரக்டர் ஒருவரை புகுத்து படத்தின் போக்கை மாற்றி சலிப்படைய வைத்து விட்டார்..
அதே சமயம் குடும்ப உறவுகளே சிதைந்து வரும் இக்காலக்கட்டத்தில் ஃபேமிலியோடு பார்க்கத் தகுந்த படம்தான் இது சந்தேகமில்லை!
மார்க் 3 / 5