பிளாஸ்டிக் ஸ்பூன், ஸ்ட்ரா போன்றவைகளுக்கு(ம்) தடை!

பிளாஸ்டிக் ஸ்பூன், ஸ்ட்ரா போன்றவைகளுக்கு(ம்) தடை!

ருமுறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்ளுக்கான தடை, ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் ஜூன் 30 ந்தேதிக்குள், அதன் இருப்பை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தயாரிப்பு முதல் பயன்பாடு வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிவிசி பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக்கால் ஆன, காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் க்ரீம் கப்புகள், ஸ்ட்ரா, ஸ்பூன் போன்றவைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவானது ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், ஜூன் 30ஆம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகளில் உள்ள விற்பனை கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் ஜூலை 30ஆம் தேதிக்கு மேல் மேற்கண்ட பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ, வினியோகம் செய்தாலோ, அல்லது சோதனை செய்யும் போது பிடிபட்டாலோ, பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!