March 31, 2023

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

ரு சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் பிரமிப்பு, காமெடி, மற்றும் ;லவ் மேஜிக் . இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த உதாரணம், எந்திரனும், இன்று நேற்று நாளை ஆகியவைகளச் சொல்லலாம் அப்படிபட்ட வரிசையில் வருவதற்கான வாய்ப்புகள் கொண்ட கதை இருக்கிறது. ஆனால் சிறப்பாக அமைக்கப்படாத திரைக்கதையால் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் நம் நேரத்தை மட்டுமே விழுங்கித் தொலைத்து துரத்தி விட்டதுதான் சோகம்.

அதாவது 90 ஸ் கிட்ஸ் என்று வர்ணித்துக் கொள்ளும் மொரட்டு சிங்கிள் இளைஞர்களின் கவலையை போக்க சயிண்டிஸ்ட் ஒருவர் மனிதர்களிடையே பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்போன் ஒன்றை உருவாக்குகிறார். அந்த ஸ்மார்ட்போனை மார்கெட்டில் பல கோடிக்களுக்கு விற்று பணம் பார்க்க வேண்டும் என தொழிலதிபர் பகவதி பெருமாள் ஆசைப்படும் சூழலில், அது திருடர்களால் களவாடப்படுகிறது. பிறகென்ன.., அந்த ஸ்மார்ட் போன் உணவு டெலிவரி வேலை பார்க்கும் சிவாவின் கைகளில் சிக்கி, அவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனிடையே தான் செயலி என்பதை மறந்து, சங்கர் மேல் சிம்ரன் ஆகிய மார்ட் போன் காதல் கொள்கிறாள். இதை அடுத்து நடப்பதுதான் திரைக்கதை.. எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்ஷன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறைகளை மிகைப்படுத்த வேண்டியதில்லைதான்..

மெயின் ரோலில். ஃபுட் டெலிவரி செய்யும் ஆசாமியாக வரும் சிவா. சுமாரான காட்சிகள், படு சுமாரான வசனங்கள், மொக்கையான முகத் தோற்றம் என்றாலும் ஃபாரின் காரில் உணவு டெலிவரி, டிரோன் மூலம் உணவு டெலிவரி, லூடோ விளையாடி பணம் ஜெயிப்பது என ஒரு சில ஹைடெக் சீன்களால். நாட் பேட் ஆக வருகிறார் டப்பிங்கில் பிற்பாடு சேர்க்கப்பட்ட வசனங்கள் போலத் தோன்றினாலும் ஆங்காங்கே வரும் காமெடிகள் மோசமில்லை.. நாயகியாக வரும் அஞ்சு குரியனுக்கு முதல் படம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு பெருமளவில் இல்லை.

ஸ்மார்ட் போன் சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்மார்ட்போனாக அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. சிம்ரனை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக வரும் ஷா ரா படத்திற்கு கூடுதல் பலம்.பாடகர் மனோவின் காமெடிகள் சிரிப்பு சரவெடி. மற்ற நடிகர்கள் தங்களுக்குரிய ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள்.. மா.கா.பா.ஆனந்த், ஷா ரா, KPY பாலா, பக்ஸ் இருக்கிறார்கள், ஆனால் காமெடிதான் இல்லை. இவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளவுக்குத்தான் நாயகி அஞ்சு குரியனுக்கும் தரப்பட்டிருக்கிறது. மா.கா.பா-வுக்கு ஜோடியாக வரும் திவ்யா கணேஷ் ஒரு சில காட்சிகளில் ஈர்க்கிறார்.

லியோன் ஜேம்ஸ்’ன் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றார் போல அமைந்திருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்… ஆர்தர் A.வில்சன் கேமராவாம்.. இண்டரஸ்ட் இல்லாமல் படமாக்கி இருக்கிறார்..

மொத்தத்தில் சிரிக்கலாமுன்னு போனவனங்களை ஏமாற்றி விட்டது

மார்க் 2.5/5