சிங்கப்பூர் நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ் ‘சினிமா’ பாடல்!
மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு முழு அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதிபர் டோனி டான் கெங்யாம், பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது உடலுக்கு அந்நாட்டின் தேசியக் கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்புப் படையினரின் கொடி அணி வகுப்பு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு செல்லப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் அவரது உடலை எடுத்து வருவதைக் காண வழியெங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தனர். பகல் 2 மணியளவில் இறுதி யாத்திரை தொடங்கியது. சிங்கப்பூரின் முக்கிய சாலைகள் வழியாக அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகத்தைந்தடைந்தது. அங்குள்ள கலாச்சார மையத்தில் எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான தமிழ் பட பாடல் ஒன்று ஒலிபரப்ப பட்டதாக்கும்.ரீசண்டா இலங்கைத் தழிழர்களை வம்புக்கிழுத்த சேரன் இயக்கிய பொற்காலம் படத்துலே வர்ற தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு… என்ற பாடல் எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான பாடலாம். இந்த பாடலை எழுதியவர் வைரமுத்து.
வைரமுத்துவிடம் இந்த பாடலைப் பற்றி அடிக்கடி பேசுவாராம் எஸ். ஆர். நாதன், அதுக்குக் காரணம், என்னோட பூர்வீகம் தமிழ்நாடுதான் அப்ப்டீன்னாலும் எந்த ஊர் என் சொந்த ஊர் என்று எனக்குத் தெரியாது. ஆனா உங்கள் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் சொந்த ஊராக இருக்குமோ என்று என் நெஞ்சம் பரவசமாகுது என்று வைரமுத்துவிடம் கூறுவாராம் எஸ்.ஆர். நாதன். அதனால்தான் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கில் அவருக்குப் பிடித்தமான பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டதாம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன், முதுமை காரணமாக அவரது 92-ஆம் வயதில் கடந்த 22-ஆம் தேதி காலமானார். சிங்கப்பூரின் 6-ஆவது அதிபராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். நீண்ட காலம் சிங்கப்பூர் அதிபராகப் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்.ஆர். நாதன். அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னர், நாற்பதாண்டு காலம் சிங்கப்பூர் அரசு அதிகாரியாகவும், அமெரிக்கா, மலேசியாவுக்கான தூதராகவும் பதவி வகித்தார்.