ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டிய கோளாறு! By யெஸ். பாலபாரதி

ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டிய கோளாறு! By  யெஸ். பாலபாரதி

வ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிசத்தின் மாதமாகக் கொண்டாடுகிறார்கள்.ஏப்ரல் இரண்டாம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.ஆட்டிசக் குறைபாடு உள்ள குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து உரையாடுவதும்,அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுமென .. மேலை நாடுகளிலும், வட இந்தியாவிலும் இந்த நாள் சிறப்புக் கவனத்தைப் பெறுகிறது. ஆனால் நம் ஊரில் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் பெரும் குறையாகவே உள்ளது.அதிலும் நம் அரசு கூட ஆட்டிசம் என்பதைத் தனித்துறையாகக் கொள்ளாமல், மூளை வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறுபட்ட அளவுகளில் இருக்கும். மிக்க மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.

ஆட்டிசம் என்ற சொல்லுக்கு தமிழில் “தன் முனைப்புக் குறைபாடு” என்று கூறலாம்.இது ஒரு நோய் அல்ல. இது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. நமது மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றி உள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாமல் செய்யும் ஒரு குறைபாடே ஆட்டிசம் ஆகும்.எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக் கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்று ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம்.ஆனால் இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தை பிறந்த பின் காது கேளாமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக் குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றை எளிமையாகக் கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசத்தை அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாது.

இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளி விவரங்கள் இங்கே இல்லை.பெற்றோர் தொடங்கி மருத்துவர் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.மேலை நாடுகளோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிக மோசமாக உள்ளது.தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தின் நிலை மிகக் கவலைக்கிடமாகவே உள்ளது.

ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது, பார்த்தல், கேட்டல், என உணரும் விசயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம். ஆட்டிசம் ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.இதனை அடையாளம் காணாமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டிருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள்., இதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். நம்மால் முடிந்த அளவிற்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்த வேண்டும்.

1943 – ல் மருத்துவர் லியோ கார்னர் (dr.leo karnnar) என்பவர் உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையை அறி ஆனால் ஆட்டிசத்திற்கு காரணமான கானர் கருதியதில் முக்கியமானது ,பெற்றோர்களின் அரவணைப்பைக் குழந்தைப் பருவத்தில் பெறாததால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார்.முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் என்னும் குறைபாட்டை முதன் முதலாக வரையறை செய்தவர் என்கிற வகையில் மருத்துவர் கானர் பங்கு முக்கியமானது. ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்தத்திலிருந்து விலகி ஓடுவது என்பது தான் அகராதிப்படியான அர்த்தம். கானர் இவ்வகைக் குறைபாடுள்ள நோயாளிகள் அப்படி உண்மையை சந்திக்காது விலகி வாழ்வதாகக் கூட எண்ணியிருக்கலாம்.முகப்படுத்துகிறார்.அவர் தனது அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்”(austistic disturbances of affective contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட் (nervous child) என்ற பத்திரிகையில் குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.

சரியாக இதே நேரத்தில் மருத்துவர் ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (hans asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த, பேசமுடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944 –ல் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக்கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுவதில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது.கானரின் ஆராய்ச்சியில் முதன் முதலாக பாதிப்புக்குள்ளானவராக கண்டு அறியப்பட்ட டொனால்ட் என்பவர் முழுக்க குணமடைந்து இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்கிற தகவல் 2010 –ல் கண்டறியப்பட்ட பொது அது ஆட்டிசக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது.

ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஒருவருக்கு பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன்தரும் என்பது நிச்சயமில்லை . எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளைப் பெற்ற, பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது.இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்ற உணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்
எவருடனும் இணைந்து இருக்காமல் ஒதுங்கி இருப்பது.

பிறரின் கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது

ஒரு பொருளை எதற்காகப் பயன்படுத்த வேண்டுமோ அதற்காகப் பயன்படுத்தாமல், அப்பொருளை வித்தியாசமாகக் கையாள்வது.

பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது. சில வேலைகளில் காது கேளாதது போல் இருப்பது.
காரணமில்லாமல் தானாகச் சிரிப்பது.

மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்டாமல் தனித்து இருப்பது.

தனது விருப்பத்தைக் குறிக்க ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி சுட்டிக்காட்ட மாட்டார்கள்.

சில செயல்களைச் சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது.

பயம் ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

பாவனை விளையாட்டுக்குள் இல்லாமல் இருப்பது.அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

தனது தேவைகளை உணர்த்த பெரியவர்களிடம் சென்று, அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள்.

அதீதமான பதட்டத்துடனும், அதீதமான மந்தத் தன்மையுடனும், அதீத செயல் திறனும் கொண்டவர்களாக காட்டிக்கொள்வார்கள்.

காரணமில்லாமல் மோசமான அழுகை, சோகம், போன்ற உணர்ச்சியை அடைவார்கள்.

வலி பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருப்பார்கள். அல்லது வலியை உணராமல் இருப்பார்கள்.

வித்தியாசமான நடவடிக்கைகள் – கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.
வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.

சில வேலைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப் படுவதையோ விரும்புவதில்லை/

தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணருவது.

பொருளற்ற சொற்களை திரும்பத் திரும்பச் சொல்வது.

பொருட்களை சுற்றிவிட்டு ரசிப்பது, அதற்குள்ளேயே மூழ்கிப்போவது.போன்ற அறிகுறிகள் அனைத்தும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்று நாம் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

தகவல் : யெஸ். பால பாரதி

error: Content is protected !!