ஆன் லைன் அடிமைகள் அதிலிருந்து விடுபட உதவும் மொபைல் ஆப்!

ஆன் லைன் அடிமைகள் அதிலிருந்து விடுபட உதவும் மொபைல் ஆப்!

Nomophobia.

இந்த வார்த்தையை கடந்த 2018ம் ஆண்டுக்கான வார்த்தையாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிக்ஷனரி, தேர்வு செய்துள்ளது. no mobile phone phobia என்பதன் சுருக்கமான இதன் அர்த்தம், ‘மொபைல் போன் இல்லாத, அல்லது பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் பயம்’. டெக் அடிமைகளாக மாறிவிட்ட நாம், செல்போன் சிக்னல் இல்லாத, சார்ஜ் தீர்ந்துபோன, அல்லது போனை எங்கோ மறந்து வைத்துவிட்ட நேரத்தில் இந்த நோய்க்கு ஆளாகிறோமாம். பலரும் பாத்ரூம் போகும் போது கூட செல்போன் எடுத்து செல்லும் நிலையில் ஆன்  லைன் அடிமை யானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து விடுபட மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஸ்மார்ட்போன்களே குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கைகளை ஆக்கிரமித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக், டிக் டாக் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து அதில் மூழ்கிவிடுகின்றனர். இந்நிலையில்தான் செல்போன்களுக்கு அடிமையானவர்களை விடுவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. பெங்களுருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை இந்த செயலியை உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் டீடாக்ஸ் பை ஷட் க்ளினிக் என்ற பெயரிலான இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் அன்றாட மொபைல் பயன்பாட்டை ஆய்வு செய்து அதை குறைத்து கொள்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். மேலும் தூக்கக் குறைபாடு, கண் எரிச்சல், தனிமை, பொழுது போக்காமை போன்ற தகவலைகளையும் இந்த செயலி பயனாளிகளிடம் இருந்து கேட்டு பெற்று அதற்கேற்ப ஆலோசனைகளை தருகிறது.

செல்போன்களுக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள் 240 பேர் இந்த செயலியை பயன்படுத்தி அதில் 75% பலன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சாதனங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி பலன் பெறுவது தொடர்பான சிறப்பு பிரிவை ஷட் என்ற பெயரில் பெங்களூரில் நிம்ஹான்ஸ் மருத்துவமனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!