ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி!

ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி!

பிரமாண்டத்துக்கு பேர் போன இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக பதவியேற்ற ஹீரோ, ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, முதல்வரையே கைது செய்வார். அரசியல் சார்ந்த படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இதே பாணியில் 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒருநாள் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக செயல்பட்டார்

.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் தவுலத்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி (19) என்பவர் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக இன்று பதவி வகித்தார். ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி, உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறாராக்கும்.

இவரது தந்தை ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். அவரது தாயார் அங்கன்வாடி ஊழியர். ரூர்கியில் (Roorkee) உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாயப் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி, கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து உத்தரகாண்ட் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வரும், குழந்தைகள் சட்டசபையில் (பால் விதான் சபா – Bal Vidhan Sabha) முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற, பெண்கள் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார் சிருஷ்டி கோஸ்வாமி.

இந்நிலையில், இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, சிருஷ்டி கோஸ்வாமி’க்கு ஒரு நாள் முதல்வராகப் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார்.

ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு பெற்ற சிருஷ்டி கோஸ்வாமி, கோடைகால தலைநகரான கெய்செயினில் அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் மற்றும் பிற மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு செய்தார். சிருஷ்டி முதல்வராக செயல்பட்ட போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருந்தார்.

error: Content is protected !!