பாகிஸ்தானுக்கு இந்தியா உதவ வேண்டுமா? பாம்புக்கு பாலா?

பாகிஸ்தானுக்கு இந்தியா உதவ வேண்டுமா? பாம்புக்கு பாலா?

பாக்கின் வரலாற்றில் இது போன்றதொரு மிகப்பெரிய மழை வெள்ளத்தையும், சேதத்தை பார்த்திருக்கவில்லை! கிட்டத்தட்ட பாலைவனமாக மாறிக்கொண்டிருந்த அதன் வடமேற்கு கூட, இதுவரை பார்க்காத மிக மோசமான மழை வெள்ளத்தை பார்த்தது என்பது பரிதாபம். ஆனால் அதற்கு காரணம், சீனா தனது கடுமையான பஞ்சத்தை சரி செய்ய, செயற்கையாக மழையை தருவிக்க செய்தது. அது அங்கு பெய்யாமல், பாகிஸ்தானில் வந்து கொட்டிவிட்டது என்கிறார்கள்.

இரண்டாம் நாளே, 1200+ மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.பல இடங்களுக்கு இன்னும் தொடர்பை கூட ஏற்படுத்த முடியாத ஒரு சூழலில், அங்கு என்ன நடந்தது என்று இன்றும் கூட தெரியவில்லை. அதனால் இறப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்பது கவலைக்குரியது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. 7 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டனர். பல வீடுகள் மண்களால் கட்டப்பட்டவை, அவை இடிந்து பலர் இருக்க இடமில்லாமல் தவிக்கினறனர். பலரின் கால்நடை போன்ற வாழ்வின் ஆதாரங்கள் அடித்து செல்லப்பட்டுவிட்டது. அதனால் பாதிப்புகள் என்பது தற்காலிகமானது அல்ல, நீண்டகாலத்திற்கு இதன் பாதிப்புகள் இருக்கும். அதுவும் வெள்ள பாதிப்புக்கு முன்பே தனது அன்றாட தேவைகளுகு கூட 6 பில்லியன் உலக வங்கியின் கடனுக்கு காத்திருந்த பாகிஸ்தானுக்கு, இந்த பாதிப்பு மிக மோசமானது.

இந்த நிலையில் இந்தியா வர்த்தக தடையை நீக்கி உதவ வேண்டும் என்று அதன் பிரதமர் கேட்டுள்ளார். இந்தியா உதவ வேண்டுமா? பொதுவாக இது போன்ற சூழலில் உதவி உடனே தேவைப்படும். பொதுவாக மீட்பு பணிக்கும், மருந்து, உணவு, தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகள் உடனே தர வேண்டும். அது பொதுவாக அண்டை நாடுகளால்தான் அந்த உதவியை செய்ய முடியும் என்ற சூழலில், இந்தியா இதுவரை குறிப்பிடத்தக்க எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே மிக மோசமான பொருளாதார சூழலில் உள்ள பாகிஸ்தானுக்கு முக்கியமாக தேவைப்படுவது பணம்.

இந்தியா, தனது மீட்பு குழுவிற்கு ராணுவ ஹெலிகப்டர்களை பயன்படுத்தும். அதற்கான உதவியை தர முன்வந்தபோது, ஹெலிக்கப்டர்கள், உதவி பொருட்கள், பணம் மட்டும் கொடுங்கள், நாங்கள அதை எங்கள் பைலட்கள் மூலம் வினியோகித்து கொள்கிறோம். அதாவது இந்தியாவின் ராணுவத்தை நம்ப மாட்டோம் என்று சொல்லிய அவர்களுக்கு, ஹெலிகாப்டர்களை கொடுத்து உதவ வேண்டுமா?

அது மட்டுமல்ல, வாஜ்பாய் ஆட்சியின் போது ஒரு பெரும் இயற்கை பேரழிவு நிகழ்ந்தது. அதற்கு இந்தியா பெருமளவில் உதவியது. ஆனால் அது முடிந்த சில மாதங்களில் கார்கில் போர் மூலம் இந்தியாவை முதுகில் குத்தியது! அடுத்து 2010 ஆண்டு இது போன்ற மற்றொரு பேரழிவு. அப்போதும் பல உதவிகளை சோனியா தலைமையிலான அரசு செய்தது. அது மட்டுமல்ல 25 மில்லியன் டாலர் பணமாக கொடுத்து உதவியது. அந்த பணம் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கொடுத்தது. ஆனால் அதில் ஒரு பகுதியை தீவிரவாதிகளுக்கு கொடுத்தது பாகிஸ்தான் அரசு. அவர்கள் அதற்கு நன்றிக்கடனாக மும்பையில் பாகிஸ்தான் தாக்கியது.
ஒவ்வொரு முறையும் நாம் செய்த உதவிக்கு கொடுத்த நன்றிகடனாக அவர்கள் திருப்பி கொடுத்தது என்ன?

இப்போது மீண்டும் அவர்களுக்கு நாம் உதவ வேண்டுமா? மக்கள் பாதிக்கப்பட்டவர்கள்தான். இன்று பாக்கில் பரவலாக மோடியை ஆதரிப்பவர்களாக கூட உள்ளார்கள். இருக்கட்டும், அதற்காக, நாம் செய்யும் உதவியை வாங்கிக்கொண்டு மீண்டும் முதுகில் குத்துவதை ஏற்க வேண்டுமா? குத்தினால், அழும் அரசு இங்கில்லை, கடுமையாக திருப்பி தாக்கும் என்ற வலிமையான அரசு நமக்கு இருக்கிறரு. அத்ற்காக உலகத்திற்கு உயர்ந்தவனாக காட்டிக்கொண்டு, அதற்கான பலனை நாளை நாம் அனுமதிக்க வேண்டுமா. உண்மையில் அவர்களுக்கு உதவி வேண்டுமெனில், கடந்த காலங்களில் செய்த தவறுக்கு வருத்தமாவது செய்யட்டும், அப்போதி அருபற்றூ நாம் சிந்திக்கலாம்.

ஆல் வெதர் ஃப்ரண்டு என்று சொல்லும் சீனாக்கூட உதவாதபோது, நாம் ஏன் உதவ வேண்டும். முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்திற்காகவாது மத்திய கிழக்கு நாடுகள் உதவி செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை. இந்தியாவே செய்யவில்லை, அபப்டி நாம் மீறி செய்தால், இந்தியாவை பகைக்கும் நிலையில் அது பார்க்கபடுமோ என்ற அச்சம்.

இந்த நிலையில் இந்தியா ஏதோ பேருக்கு சில உதவிகளை மட்டும் செய்துவிட்டு, ட்வீட்டெரில் ட்ரீட்டிவிட்டு, நம் வேலையை பார்ப்போம். ஆம், இந்தியா இரண்டு முறை அனுபவ பட்டும், மீண்டும் சகோதரா என பல்லிளித்துக்கொண்டு உதவ முதுகெலும்பற்ற அரசு இங்கே இருக்கவில்லை. பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும். ஆம், மீண்டும் பாம்புக்கு பால் வார்க்க வேண்டுமா?

மரு. தெயவசிகாமணி

error: Content is protected !!