January 29, 2022

போர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்!

நம் நாட்டின் நவீன போர் விமானமான ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானியாக லெப்டினென்ட் சிவாங்கி சிங் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில் அம்பாலா தளத்தில், ரஃபேல் விமானத்தை ஓட்டுவதற்கு ஒரு பெண் போர் விமானிக்கு, இந்திய விமானப்படை பயிற்சி அளித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில், அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிப்ரவரி 2019ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளுக்கு இடையிலான வெடிகுண்டு போரில் பங்கேற்றதன் மூலம் தேசிய புகழினைப் பெற்ற விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனின் அதே தளத்திலேயே லெப்டினன்ட் சிவாங்கி சிங் பணியமர்த்தப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சிவாங்கி சிங்கின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் போர் விமானிகளின் இரண்டாவது தொகுப்பின் ஒரு பகுதியாக 2017ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் சிவாங்கி சிங், தற்போது படைகளின் பட்டியலில் மிகப் பழமையான போர் விமானமாக பெயர் பெற்றிருக்கும் மிக் -21 பைசனை இயக்கவுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதல், அவர் ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாற்றும் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த பயிற்சிக்குப் பின் அவர் ரஃபேல் போராளி களின் இல்லமான அம்பாலா விமானக்கூட்டத்தை சேருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த செய்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல பிரபலங்கள் சிவாங்கி சிங்கிற்கு தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.