ஷிம்லாவின் பெயர் ‘ஷ்யாமலா’ என மாற்றம் அடைகிறது?
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் நகரின் பெயர், ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஷிம்லாவின் பெயரை, ‘ஷ்யாமலா’ என பெயர் மாற்றம் செய்ய, இமாச்சல பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் தலை நகரமான சிம்லா ஆங்கிலேயர்களின் காலத்தில் கோடைகால தலைநகரமாக விளங்கி வந்தது. அன்றும் சரி, இன்றும் சரி சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகவே சிம்லா நகரம் திகழ்கிறது. அதிலும் ஹனிமூன் கொண்டாட வரும் புதுமணத் தம்பதிகளின் கூட்டம் எப்போதும் சிம்லாவில் ஜேஜேவென்றுதான் இருக்கும்!
முன்னர் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் சிம்லாவின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாக தங்களுடைய கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். அதோடு இராணுவ அலுவலகமும் அங்கே நிறுவப்பட்டதால் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டியஅவசியம் ஏற்பட்டது. எனவே இமயமலை அடிவாரத்தில் சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1903-ஆம் ஆண்டிலிருந்துபோக்குவரத்து தொடங்கப் பட்டது. இது போல பல சுவையான இனிமையான இடங்கள் உண்டு
அப்படிப்பட்ட இந்த நகரின் பெயரை மாற்ற வேண்டும் என, பாரதீய ஜனதா., வலியுறுத்தியதை அடுத்து, அந்த கட்சியை சேர்ந்த, மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர், ‘ஷ்யாமலா’ என பெயர் மாற்றம் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.