சீனாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் : ஷாங்காய் டிஸ்னி லேண்டு மூடல்!

சீனாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் : ஷாங்காய் டிஸ்னி லேண்டு மூடல்!

மிக்ரான் வைரஸ்  சீனாவில் மீண்டும் அதிகரித்துள்ளதால் தொழில் நகரமான ஷாங்காயில் உள்ள ‘டிஸ்னி லேண்டு’ தற்காலிகமாக மூடப்பட்டது.

உலக நாடுகளில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சீனாவில் அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிலின் மற்றும் சங்சுன் நகரங்களில் மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு இல்லை என்றாலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொற்று பரவல் காரணமாக ஷாங்காய் டிஸ்னி லேண்டு பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பீஜிங்கில் ஒரு வாத்துக் கறி உணவகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நான்கு பேருக்கு வைரஸ் பரவியது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சீனாவில் நேற்று முன்தினம் 2027 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய நாளில் 1737 ஆக இருந்தது. இன்று 2338 பேருக்கு பாதிக்கபட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

error: Content is protected !!