”ஷாங்-ஜி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்” – திரைப்பட விமர்சனம்!

”ஷாங்-ஜி  அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்” – திரைப்பட விமர்சனம்!

இயக்குனர் – டெஸ்டின் டேனியல் கிரெட்டன்

கதை-

தி டென் ரிங்க்ஸ் சக்தி கொண்ட தன் தந்தை இறந்து போன தன் அம்மாவை திரும்ப வரவைப்பதாக நினைத்து இருள் சக்தியை எழுப்ப நினைக்கிறார். தனது தங்கை மற்றும் தன் அம்மாவின் சொந்த கிராமத்து மக்களுடன் இணைந்து தன் தந்தையை எப்படி ஜெயிக்கிறார் நாயகன் என்பதே கதை.

உலகம் முழுக்க சக்கை போடு போடும் மார்வல் சினிமாவுலக்த்தின் அடுத்த படைப்பு. மார்வல் சூபர் ஹிரோவாக இது வரையிலும் அமெரிக்க மண்ணைச் சேர்ந்தவர்களே நடித்து வந்திருக்க முதல் முறையாக ஆசிய பின்னணியில் ஒரு சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்திருக்கிறது மார்வல். மார்வல் படங்கள் குழந்தைகல் மட்டுமல்லாது பெரியவர்களும் கொண்டாடும்படி தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தப்படத்தின் கதை முழுக்க குழந்தை தனமாகவே இருக்கிறது. படமே முழுக்க ஒரு சைனீஸ் படம் போலத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.

அவெஞ்சர்ஸ் கடைசி படத்திற்கு மார்வலில் இருந்து வரும் அனைத்து படங்களிலும் மற்ற சூப்பர் ஹீரோ ரெபரென்ஸ் இருக்கும் ஆனால் இப்படத்தில் அது எதுவும் இல்லாமல் ஒரு சைனீஸ் கதையை பார்ப்பது போலவே அமைக்கப் பட்டிருப்பது மார்வல் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தான்

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் அனைத்துமே பிரமிப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் முதலில் வரும் பஸ் ஃபைட் பிரைப்பின் உச்சம் எனலாம். சைனீஸ் படம் என்பதாலோ என்ன்வோ ஆனால் சண்டைக்காட்சிகள் அனைத்திலும் ஜாக்கிசானின் சாயல் அதிகமாக இருக்கிறது.

நாயகனின் நண்பியாக வரும் கேட்டி பாத்திரம் படத்தின் பல சீரியஸான இடங்களில் அட்டாகச கமெண்ட்களால் சிரிப்பை வரவழைக்கிறது. நாயகனின் சைனீஸ் முகம் நமக்கு செட்டாக இன்னும் கொஞ்ச காலமாகும் ஆனால் அவர் சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார். படத்தின் கதை இடைவேளைக்கு பிறகு ஒரு காட்டுக்குள் முடங்கி விடுகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி நம்ப முடியாத டிராகன் இருள் சக்தி என மந்திர தந்திர படம் போல நீள ஆரம்பித்து விடுகிறது. பரபரவெனெ செல்லும் படம் க்ளைமாக்சில் சொதப்புவது படத்திற்கு பலவீனம்.

மார்வல் தொடர்புகள் படத்தில் இல்லாததும் மார்வல் ரசிகர்களுக்கு மைனஸ் தான்.

சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு ஆசியாவின் கதை ஆசிய நாயகன் படத்தின் பலம். இறுதியில் வரும் போஸ்ட் கிரடிட் காட்சியை தவறவிடாதீர்கள் அடுத்து வரும் மார்வல் படங்களின் கதை அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பொழுது போக்க ஒரு சிறந்த ஆக்சன் காமெடி படம். மார்வல் ரசிகர்களுக்கு நல்ல தீனி.

error: Content is protected !!