October 19, 2021

செக்ஸ் – என்ற சொல்லுக்கு இடமில்லை1 – பாலியல் கல்வி துறை முடிவு

செக்ஸ் என்ற வார்த்தை பயன்பாடு, இந்திய சமூகத்தில் ஏற்கெனவே முகம் சுளிக்கும் விஷயமாக இருந்து வரும் நிலையில், தற்போது அரசும் அப்படியே நினைப்பது போல் அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.உலகிலேயே அதிகம் பேருக்கு தெரிந்த வார்த்தைகள் என்று ஒரு கணக்கெடுத்தால் அதில் SEX என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்கும். செக்ஸ் என்ற ஆங்கில வார்த்தை பால், பால் வேறுபாடு , பால் வேறுபாட்டுத்தன்மை, பால் வேறுபாட்டுணர்வு, பாலார், பால் சார்ந்தவர் தொகுதியெனத் தமிழில் அர்த்தப்படும்.ஆங்கிலமே தெரியாதவர்களுக்குக் கூட இந்த வார்த்தை அறிமுகம் ஆகி இருக்கும்.

sex oct 26

ஆக.. செக்ஸ் என்கிற ஒரு ஒற்றை சொல் நம் நாட்டில் கெட்ட வார்த்தை போல்தான் பாவிக்கப்படுகிறது என்பது உண்மை.. ஆனால் பெரும்பாண்மையோரை இந்த ஒற்றை சொல் தான் ஆட்கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை சொல்லை உபயோகித்தால் பத்திரிகைகள் விற்று தீர்கின்றன, திரைப்படங்கள் வசூல் சாதனை புரிகின்றன, தொலைக்காட்சி சேனல்களின் டி ஆர் பி ரேட்டிங்குகள் உயர்கின்றன.

ஆனாலும் மனிதனோ விலங்கோ செக்ஸ் என்பது வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது. செக்ஸ் என்ற வார்த்தையை எங்கே படித்தாலும் அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவது ஒரு சராசரி நபரின் எண்ணமாகும். அதே சமயம் சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண்களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷயத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

இதனிடையே கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு பாலியல் கல்வியில் இருந்து ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை நீக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

செக்ஸ் என்ற வார்த்தை, சிலரை புண்படுத்துவதாக இருப்பதால் அந்த வார்த்தையை நீக்கும் முடிவை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ளது . செக்ஸ் என்ற வார்த்தைக்கு மாறாக வேறொரு வார்த்தையை பயன்படுத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.