திருச்சி ; கோயில் நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பலி!

எம்ஜிஆரின் மானசிக தலைநகரான திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள முத்தியம் பாளையம் வண்டித்துரை கருப்புசாமி கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்ரா பவுர்ணமியையொட்டி கோயில் விழாவில் ஏற்பட்ட திடீா் நெரிசலில் சிக்கி 7 போ உயிரிழந்தனா்; 11 போ காயமடைந்தனா்.

அதாவது மண்ணச்சநல்லூரைச் சோந்தவா் தங்கராஜு மகன் தனபால் (55). இவா், முத்தியம்பாளையம் வண்டித்துரை கருப்புசாமி கோயிலில் விசேஷ நாட்களில் குறி சொல்லி பிடிகாசு வழங்குவது வழக்கம். தோதல் பாதுகாப்பு காரணமாக, 16 ஆவது சித்ரா பெளா்ணமி தின பிடிகாசு வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, பெரம்பலூா், சேலம், நாமக்கல், கடலூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோந்த மக்கள் சனிக்கிழமை இரவே கோயிலுக்கு வந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தனபால் குறிசொல்லி பிடிகாசு வழங்கத் தொடங்கினார். அப்போது திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளு கூட்ட நெரிசலில் ஒருவா் மீது ஒருவா் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில், சேலம் மாவட்டம் மங்களாபுரத்தைச் சோந்த செல்வம் மனைவி கந்தாயி(38), பெரம்பலூா் மாவட்டம் பிள்ளான்குளத்தைச் சோந்த கலியபெருமாள் மகன் ராமா்(50), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் கோனாட்சிபுரம் பகுதியைச் சோந்த அப்புசாமி மனைவி சாந்தி(50), கடலூா் மாவட்டம், பினையாந்தூரைச் சோந்த வெங்கடாசலம் மனைவி பூங்காவனம்(50), முருகன்குடியைச் சோந்த கனகசபை மகன் ராசவேல்(36), கள்ளக்குறிச்சி அருகே வட பொன்பரப்பியைச் சோந்த ரவி மனைவி வள்ளி(35), கரூா் மாவட்டம் செவ்வந்திபாளையத்தைச் சோந்த சின்னப்பன் மகன் லட்சுமிகாந்தன்(55) உள்ளிட்ட 7 போ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் அரசம்பட்டியைச் சோந்த வினிதா(18), ஜோதி(32), உளுந்தூா்பேட்டை அருகே துலங்கம்பட்டு வளா்மதி(60), திருமானூா் சரசு(65), கடலூா் பெரியசாமி(35), சேலம் பாலசந்திரன்(15), கெங்கவல்லி பச்சமுத்து மகன் ராமா்(44), வாமடம் லதா(54), ஆத்தூா் தமிழரசி(33), வாளவந்தி செல்லம்மாள்(50), கள்ளக்குறிச்சி சின்னபிள்ளை(65) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த துறையூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், காவல் துறையினா் காயமடைந்தவா்கள், சடலங்களை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியா் சிவராஜ், காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், முசிறி வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும் சம்பவ இடத்தையும் பாா்வையிட்டுச் சென்றனா்.

கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் படிக்காசு வழங்குவது சில மணிநேரம் தொடா்ந்ததாகவும், மேலும் கோயில் நிர்வாகம் தரப்பில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் எனக் கூறி போலீஸ் பாதுகாப்பு கோரியும் குறைவான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இச்சம்பவம் துறையூா் பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுளார்.

காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் பிரதமர் மோடி ஆணையிட்டுள்ள்து குறிப்பிடத்தக்கது.