May 15, 2021

கொரோனா ; தடுப்பூசி மருந்தாகிய கோவிஷீல்டு விலை எகிறியது!

கொரோனா தொற்று நோய் தடுப்பூசி மருந்தாகிய கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.

நம் நாட்டில் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த.நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி மே முதல தேதியிலிருந்து கிடைக்கும் என்று நேற்று மத்திய் அரசு அறிவித்தது..45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் ஏற்கென்வே விற்கப்படும் ரூ.250 விலையில் கிடைக்கும். ஆனால் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் கோவிஷீல்டு தடுப்பூசி போடலாம். ஆனால் அதற்கான விலையை தடுப்பூசி மருந்துக் கம்பெனிகள் அறிவிக்கும் என் மத்திய அரசு கூறியது. அதன் படி சீரம் இன்ஸ்டிடியுட் இப்பொழுது விலையை அறிவித்துள்ளது. அது அறிவித்துள்ள விலை எற்கெனவே அமலில் உள்ள விலைவிட அதிகம் என்பதுதான் ஹாட் டாக்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அதற்கான தடுப்பூசி கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இன்று தடுப்பூசி மருந்தின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது ஒட்டுமொத்தத் உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசு செயல்படுத்தும் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கும், 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என தனித்தனியாக விலையை நிர்ணயித்தும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் விற்பனையாகும் கரோனா தடுப்பூசியின் விலைகளை ஒப்பிட்டும் இந்த புதிய விலைப்பட்டியலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீரம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1500க்கும்,

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.750-க்கும்,

சீனாவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் உலகளவில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.