இன்ஸ்ட்ராகிராமில் ஒன் மினிட் ஸ்டோரி வந்து குவியப் போகுதுங்கோ! – AanthaiReporter.Com

இன்ஸ்ட்ராகிராமில் ஒன் மினிட் ஸ்டோரி வந்து குவியப் போகுதுங்கோ!

முன்னொரு காலத்தில் சினிமா எடுக்க ஆசைப்படுவோர் யாரிடமாவது அசிஸ்டெண்டாக இருந்து அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, வெடகப் பட்டு , வேதனைப்பட்டு வளர்த நிலையில்தான் டைரக்டர் ஆனார்கள்.. அப்பாலே இப்பத்திய ஹைடெக் வேர்ல்டில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செஞ்சு அதை யூ டியூப்-பில் ஏத்தி புரொடியூட்சருக்கு அனுப்பி இம்பரஸ் பண்ணி இயக்குநர் சேரில் உட்கார்ந்து புடாதீங்க.. இப்படி போற சூழலில் சினிமா-வைத் தாண்டி சென்சார் இல்லாத பலான பலான கம்பெனிகளுக்காக ஆட்டோ சங்கர், ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்த சகல சமாச்சாரங்களையும் வேறெதோ பிளாட்பார்மில் ஏற்றி பிழைப்பு ஓட்டுவதுடன் சினிமா-வை அழிக்கும் போக்கும் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இதனிடையே இன்ஸ்டாகிராம் என்பதை கேள்விப் பட்டிருக்கலாம்..

உலகமெங்கும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இதனைப் பயன்படுத்தி வாராய்ங்க.

இப்பேர்பட்ட இன்ஸ்டாகிராமில் ஒரு நிமிட எபிசோடுகளைக் கொண்ட புதிய வெப் ஸீரீஸ் அறிமுகமாக போகுதாம்.

கிட்டத்தட்ட சின்னத்திரை விளம்பத்துக்குண்டான டயத்தில் இத்தகைய வடிவத்தில் இன்ஸ்டாக்ராமில் அறிமுகமாக உள்ள முதல் ஸீரீஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

FIRSTS என்று பெயரிடப்பட்டுள்ள இந்த் ஸீரிஸில் ரோஹன் ஷா அபூர்வா அரோரா ஆகியோர் நடிச்சிருக்காய்ங்க.சகல்ருக்கும் தெரிஞ்ச பள்ளிப்பருவத்துக் காதல் குறித்தும், அதன் அருமை பெருமையான முதல் தருணங்கள் குறிச்சும்தான் இந்த ஸீரீஸ் பேசுகிறது. – அதாவது நமக்கு ரீசண்டா ரிமைண்டர் வரும் 96-தானாம்

ஜனவரி 25-ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

ஆக இனி இந்த இன்ஸ்ட்ராகிராமில் ஒன் மினிட் ஸ்டோரி சொல்லி ஹிட் அடிச்சா கோலிவுட்டில் டைரக்டராகலாம்ங்கற நெலமை வரப் போகுதுங்கோ!