October 16, 2021

சிம் கார்டு வாங்க ஆதார் முக அடையாள ஒப்பிடல் கட்டாயம்! செப் 15 முதல் அமல்!

இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடை யாள எண் கொண்டஅட்டை ஆதார் அடையாள அட்டை ஆகும்.  இதில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கி இருப்பதுடன் அவை ரகசியமுடன் வைத்து பாதுகாக்கப்படும். இந்த நிலையில், ஆதார் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அவற்றை பயன்படுத்தி பல முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது.  இது போன்ற தவறான நோக்கத்தில் ஆதார் தகவல்களை பயன்படுத்துவோருக்கு இந்திய அரசு அபராதம் விதிக்க வேண் டும் என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடென் கூறியுள்ள நிலையில் 2018 செப்டம்பர் 15ம் தேதி முதல் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வாடிக்கை யாளர்கள் சிம் கார்டு வாங்க கைரேகை மற்றும் கருவிழியுடன் முக அடையாளம் சரிபார்க்கும் நடைமுறை அமல்படுத்தப்படவேண்டும் என ஆதார் ஆணையமான யூஐடிஏஐ (UIDAI) அறிவித்து      உள்ளது.

மக்களின் தனிநபர் அடையாளமாக ஆதார் அட்டை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. ஒவ்வொரு நபரின் அடையாளமாக அவரது கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்பட்டு  உள்ளது. இதன் மூலம் ஒருவரை பற்றிய விவரங்களை எளிதில் அடையாளம் காண முடியும். தற்போது மொபைல் சிம்கார்டு வாங்குவது. வங்கி கணக்கு துவங்குவது போன்ற பல விஷயங் களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் முறைகேடு நடப்பதை தடுக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆதார் கார்டு மூலமாக தனிநபரை அடையாளம் காண அவரது கைரேகை மற்றும் கருவிழி சரி பார்க்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் கைரேகை, கருவிழியுடன் முக அடையாளத்தை உறுதி செய்வதன் மூலமாக தனிநபர் அடையாளத்தை அங்கீகரிக்கும் திட்டத்தை அமல்படுத்த யூஐடிஏஐ திட்டமிட்டது.இந்த திட்டத்தை கடந்த ஜுலை 1ம் தேதி அமல்படுத்த யூஐடிஏஐ திட்டமிட்டது. பின் அந்த திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொலைதொடர்பு நிறுவனங்களில் முதலில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதி முதல் தொலை தொடர்பு நிறுவனங்கள் தனி நபரின் முகத்தை ஆதாரில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து உறுதிப்படுத்திய பின்பே சிம் கார்டுகளை விற்க வெண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆதார் கார்டு பயன்படுத்தாமல் சிம் கார்டு வாங்கும் நபர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என யூஐடிஏஐ தலைமை நிர்வாக தலைவர் அஜய் பூஷன் பாண்டே செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

அதன்படி இனி சிம் கார்டு வாங்கும் நபர்கள் தங்கள் ஆதார் எண்களை அடையாளத்திற்காக வழங்கி னால் அவர்களின் கைரேகை அல்லது கருவிழி மற்றும் முக அடையாளம் சரிபார்க்கப்படும். செப் டம்பர் 15 முதல் தொலைதொடர்பு நிறுவனங்கள் மாதத்தில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பரிவர்த் தனைகளை முக அடையாளத்தை சரிப்பார்த்து செய்ய வேண்டும். மீறினால் 0.20 சதவீத பண பரிவர்த்தனை அபராதமாக விதிக்கப்படும் என யுஐடிஏஐ அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது. ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்தி முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜெய்ப்பூரில் நேற்று மாலை டாக் ஜர்னலிசத்தின் ஐந்தாவது பதிப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு ஸ்னோடென் பேசும் போது, “நல்ல விசயத்திற்காக ஆதாரை அமல்படுத்துவதில் இந்திய அரசு தீவிரம் காட்டி னால்,  அந்த தகவலை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக அரசு அபராதம் விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அவர் கண்காணிப்பு விவகாரம் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்பொழுது, உங்களுக்கு உரிமைகள் இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது என எந்த அரசாங்கமும் கூறாது.  அரசாங்கம் ஆனது, புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறோம்.  அது மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களை காக்கும் என்று கூற வேண்டும் என கூறியுள்ளார்.

இளைஞர்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்களை கவனத்தில் கொள்வதில்லை என்பது கற்பனை.  அவர்கள் தங்களது ரகசியங்களை பற்றி அதிகம் கவனத்தில் கொள்கின்றனர் என்றும் ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.