டிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்!

டிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்!

சர்ச்சை நாயகனும் அமெரிக்க அதிபருமான டிரம்ப்க்கு எதிராக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை யில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்கள் புதன்கிழமை செனட் சபையிடம் ஒப்படைக்கப் பட்டது. டிரம்புக்கு எதிரான விசாரணைக்காக செனட் சபை நீதிமன்றமாக மாற்றப்படும்.

நடப்பு ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்புக்கு எதிராக களமிறங்கியுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் தொடர்பாக விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கீக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நாடாளு மன்ற பிரதிநிதிகள் சபை அதிபர் டிரம்ப் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியது.

விசாரணை முடிவில் அதிபர் டிரம்ப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிபர் பதவிக்கான தகுதியை இழந்து விட்டதால் அவரை பதவி நீக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தீர்மானப் பிரதி செனட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி அதிபர் டிரம்புக்கு எதிரான தீர்மானங் களில் கையெழுத்திட்டு அவற்றை நேற்று செனட் சபைக்கு அனுப்பி வைத்தார். செனட் சபையும் விசரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும், என்று பிரதிநிதிகள் சபை கோரியுள்ளது..

அதைத் தொடர்ந்து தற்போது செனட் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணை நடைபெற உள்ளது. செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அதிபர் டிரம்புக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செனட் சபையின் தலைவர் மிட்ச் மெக்கானல் இன்று அந்த தீர்மானங்களை செனட் சபையில் பிரதிநிதிகள் சபை நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக வாசித்து காட்ட அனுமதி வழங்கினார்.

அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணைக்காக செனட் சபை நீதிமன்றமாக மாற்றப்படும்.

அதற்காக அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 2 மணியளவில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செனட் சபையில் பதவி பிரமாணம் செய்துகொள்வார். பின்னர் செனட் உறுப்பினர் களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார். செனட் சபை நீதிமன்றமாக மாறுவது அமெரிக்க வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

செனட் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணை ஜனவரி 21ம் தேதி துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

error: Content is protected !!