August 14, 2022

அமமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது!

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் உட்பட 30க்கும் மேற்பட்ட நாட்கள் டிடிவி சார் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகி களுடன் களத்தில் பயணத்திருக்கிறேன்…. கள யதார்த்ததை உங்கள் அனைவருடனும் சேர்ந்து பார்த்திருக்கிறேன்…. என்னால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை… கள யதார்த்தம் வேறாக தான் இருந்தது…மக்களும் தெளிவாகதான் இருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் விசித்திரமாக இருக்கிறது. நிச்சயமாக மக்களவைத் தேர்தலில் தேனி, இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, மதுரை, தென்காசி இந்த தொகுதிகளை அமமுக கைப்பற்றும் என்று நினைத்தேன்…

இதில் உள்ளடி வேலைகள் நிறைய நடந்திருக்கிறது… மாற்றுக் கருத்து இல்லை… நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் எடப்பாடி ஆட்சி தொடர 9 இடங்கள் தேவை அது மட்டும் எப்படி சரியாக கிடைத்திருக்கிறது என்பது தான். அதே நேரத்தில் Exit poll மூலமாக நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவாக இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக நம்ப வைத்து அதன் பெயரில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது.

நீங்கள் கேட்கலாம் மோடி மோசடி செய்து இருந்தால் எப்படி தமிழ்நாட்டில் திமுக வந்தது என்று கேரளாவில் காங்கிரஸ் வர முடிந்தது என்று அதுதான் நாம் பார்க்க வேண்டிய ஒன்று நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு அலை இருப்பதாகத் தெரிந்தாலும் தமிழகம் கேரளம் மட்டுமே விதிவிலக்கு அதிலும் மோடி ஜெயித்திருந்தால் தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பது அம்பலமாகிவிடும். அதனால்தான் இங்கே திமுகவை ஜெயிக்க வைத்து விட்டு ஒன்பது சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஜெயித்து ஆட்சியை தக்க வைத்திருக்கிறது இதுதான் மோடியின் சித்து விளையாட்டு.

ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பது 5 சட்டமன்ற தொகுதி அல்லது 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும் அப்படிப் பார்த்தால் எனக்கு தெரிந்து ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு குறைந்த பட்சம் அமமுக நிர்வாகிகள் மட்டுமே 50,000 பேர் இருக்கக்கூடும் ஆனால் இங்கு சில மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 ஆயிரத்தை மட்டுமே தாண்டி யிருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன் பல்வேறு தலைவர்களுடன் பல காலங்களில் பயணித்திருக்கிறேன் ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் குறிப்பாக மகளிர் அணி நிர்வாகிகள் ஆகட்டும் புதிதாக களத்திற்கு வந்து இருக்கக்கூடிய இளைஞர்கள் ஆகட்டும் அவர்களுடைய உழைப்பு என்பது அபரிதமாக இருந்தது. இதை வேறு கட்சிகளில் பார்க்க முடியாது….பல்வேறு தொகுதிகளில் அமமுக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. சின்னம் கிடைத்த 16 நாட்களில் அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறீர் கள் என்பதில் பெருமை கொள்ளுங்கள்.

நாட்டில் இருக்கக்கூடிய மேதாவிகள் காங்கிரஸை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்..

அதே போல தான் நானும் சொல்கிறேன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உறுப்பினர்களும் தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் நாம் எந்த இடத்தில் தவறவிட்டு இருக்கிறோம் என்ன தவறு நடந்திருக்கிறது என்பது கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோரிடம் தான் இருக்கிறது. தலைமையையோ அல்லது அவருடைய செயல்பாடுகளையோ யாரும் இம்மியளவும் குறை சொல்ல முடியாது.

தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய தலைவர்களை எந்த தலைவர் கிராமம் கிராமமாக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து இருக்கிறார். அம்மாவிற்கு அடுத்தப்படியாக டிடிவி தினகரன் மட்டுமே…ஆளுமையிலும் திறமையிலும் சாணக்கியத்தனத்திலும் அவரை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை.

தமிழக மக்கள் ஏன் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்கள் அனைவருமே ஏற்றுக்கொண்ட ஒரு தலைவராக டி வி தினகரன் உருவெடுத்து இருக்கிறார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடிய அதே வலியும் வேதனையும் பன்மடங்கு தலைமைக்கும் இருக்கும்.

ஏற்றுக்கொண்ட தலைமையின் வழிகாட்டுதலோடு சிரிப்பவர்கள் ஆயிரம் சிரிக்கட்டும் ஏளனம் செய்பவர்கள் செய்யட்டும் இவற்றையெல்லாம் தாண்டி தான் நாம் செதுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதே கம்பீரத்தோடு அதே வீரத்தோடு சும்மா காலரை தூக்கி விட்டு உங்கள் அனைவரையும் மீண்டும் களத்தில் அதே ஊக்கத்தோடும் சுறுசுறுப்போடும் சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற ஊடகத்தை சேர்ந்தவனின் ஆசை…

இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் தெரியும் யார் உண்மையான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டன்? டி டி வி தினகரன் வழியை பின்பற்றி அவர் வழியில் நடப்பவர்கள் யார் என்பது இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு நிச்சயமாக காட்டும். அடிபட்ட சிங்கத்திற்கு தான் தெரியும் அதன் வேதனையும் வலியும் வேதனையும் வலியையும் மறக்காமல் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் இருக்கட்டும் அல்லது சட்டமன்ற இடைத்தேர்தல் இருக்கட்டும் அதன் பிறகு வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் இருக்கட்டும் உங்களுடைய உழைப்பால் நீங்கள் அனைவரும் அரியணையில் ஏறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நின்று உழைத்து இந்த அளவிற்கு கொண்டு வந்து சேர்த்த அனைவ ருக்கும் உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…..

அனைவருக்கும் வாழ்த்துக்கள்….

நன்றி….

இப்படிக்கு

உங்களில் ஒருவன்….!