August 12, 2022

தமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ! – எச்சரிக்கை ரிப்போர்ட்!

பயமுறுத்தும் செகண்ட் ஷோ திரை.. உண்மை தான்… அண்மையில் ஓர் இரவு கவிஞர் கவி பாஸ்கர் அவர்கள் எனக்கு ஃபோன் பண்ணினார், சார் எங்க இருக்கீங்க என்றார், வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றேன்.. மேலும் தொடர்ந்தார் “செகண்ட் ஷோ சினிமா பார்க்க உதயம் தியேட்டர் வந்தேன் , சாஹூ படத்திற்கு டிக்கெட் கேட்டேன், இல்லை என்று சொல்லி விட்டார்கள் சார் என்றார்.. இதில் என்ன ஆச்சர்யம் பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய பட்ஜெட் படம் என்றால் டிக்கெட் கிடைப்பது கடினம் தான் சார் என்றேன் நான்.. அவர் மறித்து சார் டிக்கெட் ஆவது மண்ணா வது, ஷோ வே கேன்சல் ஆகிடுச்சு னு தியேட்டர் ல சொல்லிட் டாங்க சார் என்றார் ”

எனக்கு கொஞ்ச நேரம் குழப்பம், தியேட்டர்ல் படம் முதலில் ஓடுதானு பாருங்க, அது வேற தியேட்டர்ல் ஒட போகுது என்றேன்.. அவர் விடாப்பிடியாக, உங்களுக்கு போட்டோ வேணும்னா எடுத்து அனுப்புகிறேன், உதயம் தியேட்டர்ல் சாஹூ படம் கேன்சல் என்று உறுதி படக் கூறினார்..

எனக்கு கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், பரவாயில்லை சார் அதே தியேட்டர்ல் ஜெயம் ரவியின் “கோமாளி” படம் பாருங்களேன்.. என்றேன், ஆறுதலாக..!!! அவர் சிரித்து கொண்டே அதையும் பார்த்தாச்சு என்றார்… சரி ஏற்க்கனவே பாத்துட்டீகளா..!!! என்றேன். இல்லை கவுன்டரில் கையை விட்டு துழாவி பாத்தாச்சு… அந்த பட ஷோவும் கேன்சல் என்றார்… அப்ப வேற என்ன படம் தான் ஓடுதுன்னு கேட்டேன்… உதயம் தியேட்டர் ல்… எல்லா பட செகண்ட் ஷோ வும் கேன்சல் என்றார்.. அதிர்ச்சியாக..

சரி சார் நான் பக்கத்துல காசி தியேட்டரில் போய் அந்த படத்த பார்த்துக்கிறேன் என்று ஃபோன் யை வைத்தார்… நான் வீடு வந்து சேர்ந்தேன்… மீண்டும் கவிஞர் இடம் இருந்து ஃபோன்… நான் “சரி காசி தியேட்டரில் நிம்மதியாக படம் பார்ப்பார் என நினைத்து ஃபோன் யை எடுத்தேன்…

இப்போது” சார் அங்கும் எல்லா ஷோ வும் கேன்சல் ஆகும் சூழல் என்றார்…

சூழல்னா எப்படி சார் என்றேன். அதற்கு அவர் “20 டிக்கெட் புக்கிங் ஆனா, பார்க்கலாம் என்று சொல் கிறார்கள்.. எனக்கு டிக்கெட் எடுத்து படம் ஓட்டலைனா, காசும் போய் விடும் னு எடுக்கல என்றார்.” .. மற்றவர்கள் என்றேன்… எல்லோரும் தயங்கியபடி தான் இருக்கிறார்கள் என்றார்…கடைசியா வெறுத்து போய் “ஹவுஸ் புல் “னு போடு மாட்டி டிக்கெட் கிடைக்காமல் போனாலும் ஒரு மகிழ்ச்சி இருக்கும், இது ரொம்ப கொடுமையாக இருக்குசார் என்றார்..

இந்த நிலை கடந்த 15 ஆண்டுகளாக உள்ளது… விசேஷ நாள், மாஸ் ஹீரோ களின் OPENING நாள் தவிர, மற்ற நாள் அனைத்தும் தமிழ்நாடு திரை அரங்கங்கள் நிலை இதுதான்.. எல்லோரும் இரவு வீட்டில் தூங்கும் போது… அவர்களும் திரை அரங்கை பூட்டி விட்டு தான் தூங்கு கிறார்கள்.. படத்தில் கோடி கோடி யாக வாங்கிய CELEBRITY களும் நன்றாக தூங்குகிறார்கள்… பணம் போட்ட தயாரிப்பாளர் தூக்கில் தொங்குகிறார்கள்….

.. இன்று காலை SUN TV ல் சாஹூ படம் 3 நாளில் 294 கோடி வசூல் என்று பிரம்மாண்டமான செய்திகள்… இந்த செய்திகள் யாருக்காக என்று தெரியவில்லை… ஆனால் உண்மை நிலவரம் கலவரம் தான்..

சினிமாவின் சடு குடு ஆட்டம் காமெடி தான் போங்க… இங்கு FLAP என்றால், தெலுங்கில் சூப்பர் ஹிட் என்பார்கள்.. அதுவு‌ம் யாருக்காக…????

இது என்றில்லை சமீபத்தில் வெளியான அனைத்து பெரிய, சிறிய படங்களின் நிலையும் இதுவே..இப்போது எல்லாம் SECOND SHOW போவதில் உள்ள சிக்கல்.. ஆளே இல்லாத திரை அரங்கில் ஏற்படும் பயம், எதுவரை என்றால்… கழிப்பறைக்கு சென்று திரும்புவதில் ஏற்படும் பயத்தால், அந்த ஒரு சில பேரும் போவதில்லை..

மீண்டும் ஃபோன் ஒலித்தது, கவிஞர் கவி பாஸ்கர்தான், அவர் பேசும் முன்பே நான் “என்ன சார் தூங்க ரெடி ஆகியாச்சு போல என்றேன்…!!! பதிலுக்கு அவர்” விட்று ஓ மா…!!! வீட்டில் உட்கார்ந்தபடியே NET FLIX ல் ஒரு சூப்பர் படம் பார்க்க போறேன் என்றார்… “எனக்கு மகிழ்வாக இருந்ததது… எப்படியோ ஏமாற்றம் அடையாமல் நிம்மதியாக இன்றைய இரவை கழிக்க போகிறார் என நினைத்துக் கொண்டேன்..

“களை இழ‌ந்த, இடத்தை சினிமாவே விரும்பு வதில்லை.”.. அதனால் தான் மக்களை தேடி சினிமா வீட்டுக்குள் புகுந்து கொள்கிறது.. எப்படியென்றால் YOU TUBE, NET FLIX, AMAZON என புது வடிவம் கொள்கிறது…

ஒவ்வொரு காலத்திலும் சினிமா தன்னை தானே காலத்திற்கு ஏற்றார் போல் நவீன மாக புதுப்பித்துக் கொள்ளும் மகத்தான ஆற்றல் பெற்றது… அதைதான் இப்போது செய்ய ஆரம்பித்து உள்ளது.. காலமாற்றம், மாற்றத்தில் ஏற்படும் புதிய வீச்சுகள் ஆகியவற்றை உணர்ந்து பணம் போட்டவர்கள், விழிப்புடன் இருந்து ஆதாயம் கொள்ள வேண்டிய நேரம்..

GA. SHIVA SUNDAR