நிலையான வளர்ச்சி குறியீட்டில் பின்னடைந்த தமிழக – நிதி ஆயோக்

நிலையான வளர்ச்சி குறியீட்டில் பின்னடைந்த தமிழக – நிதி ஆயோக்

கடந்த 2015, செப்டம்பரில் ‘சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு’ என்ற குறியீட்டு திட்டத்தை ஐ.நா. அறிமுகப்படுத்தியது. இதில் 16 இலக்குகள் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் பொருளா தாரம், கலாசாரம், வளர்ச்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் கொள்கைகளை உருவாக்கும், ‘நிதி ஆயோக்’ அமைப்பு, மத்திய புள்ளியியல் துறையுடன் இணைந்து கடந்தாண்டு முதன் முறையாக, இந்திய மாநிலங்களின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்தது. மாநில அரசுகளிடம் நான்கு பிரிவுகளில் போதுமான புள்ளி விபரம் இல்லாததால் 12 இலக்குகள் அடிப்படை யில் ஐ.நா., மற்றும் சர்வதேச பசுமை வளர்ச்சி மையத்தின் ஆதரவுடன், குறியீடு தயாரிக்கப் பட்ட்டது. அதில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில் ஹிமாச்சல பிரதேசம் முதலிடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும், கேரளா, மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்தில் இமாச்சல பிரதேசம் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்கள் உள்ளன. இந்த தகவல்கள் அடங்கிய அறிவிப்பை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபை நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய 17 இலக்குகளை அறிவித்து  உள்ளது. அதில் 16 இலக்குகளை நிதி ஆயோக் ஏற்றுக்கொண்டு இந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளின் அடிப்படையில் 306 விவரங்களை திரட்டி அவற்றின் அடிப்படையில் குறியீட்டை வகுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெளிவுபடுத்தியுள்ளது.

இதை கவனத்தில் கொண்டு நிதி ஆயோக் இந்த 306 விவரங்களில் 100 விபரங்களை மட்டுமே திரட்டி அதன் அடிப்படையில் குறியீட்டை தயாரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்திய மாநிலங்கள் தொடர்பான குறியீட்டு அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டது. அச்சமயம் மூன்றாம் இடத்தில் இருந்த கேரளம் 70 புள்ளிகளுடன் 2019 ஆம் ஆண்டிலும் முதல் இடத்தைப் பிடித்தது. முதல் இடம் பிடித்த ஹிமாச்சல் பிரதேசம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. போன ஆண்டு இரண்டாம் இடம் பிடித்திருந்த தமிழகம்    இந்தாண்டு மூன்றாமிடத்தை ஆந்திரா மற்றும் தெலுன்கானா-வுடன் பங்குப் போட்டு கொண்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 70 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

உத்தரப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் 2018ம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து கணிசமாக முன்னேறி உள்ளன.

ஆனால் 2018 ஆம் ஆண்டு எந்த நிலையில் குஜராத் மாநிலம் இருந்ததோ அதே நிலையில் 2019 ஆண்டிலும் உள்ளது. முன்னேற்றம் எதுவும் இல்லை என நிதி ஆயோக் அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக இந்தியா 2018ம் ஆண்டில் 57 புள்ளிகள் பெற்றிருந்தது.

இப்பொழுது 2019ல் 60 புள்ளிகளை பெற்று இந்தியா சற்று உயர்ந்துள்ளது.

பசி இல்லா மாநிலங்களாக கோவா, மிசோரம், கேரளம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகியவை உள்ளன.

2018 ஆம் ஆண்டு 65 முதல் 99 புள்ளிகளுடன் முன்னணி மாநிலங்களாக கேரளம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் இருந்தன,

2019 ஆம் ஆண்டில் இந்த 3 மாநிலங்களுடன், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், சிக்கிம், கோவா ஆகிய 5 மாநிலங்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக்கும்.

error: Content is protected !!