April 17, 2021

ஏப்ரல் 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள்!

மிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரல் 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் நடத்த, பள்ளித் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடைபெற்றுவந்தன. அதே சமயம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறும் நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்ததும், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.