தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல்!

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல்!

தமிழ்நாட்டில் மேலும் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கும் மே 19ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

நடக்க இருக்கும் பார்லிமெண்ட் மற்றும் இடைத்தேர்தலகளை ஒட்டி தமிழகத்தில் எக்கச்சக்கமான அரசியல் குளருபடிகள் அன்றாடம் நடந்த வண்ணம் உள்ளது. அதிகும் இது வரை தமிழக அரசியல் களம் காணாத வகையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் ஆளும் கட்சியான அதிமுக தோற்றால் தமிழக அரசே மாற வாய்ப்புண்டு என்பதால் இது மினி சட்டசபை தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

முன்னதாக அதிமுக அணியில் மாறுபட்ட நிலைபாடு கொண்டிருந்த 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இதையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்தார் சட்டப்பேரவை தலைவர். திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஓசூர் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி தகுதி நீக்கம் காரணமாக அந்த தொகுதியும் அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் 21 தொகுதிகள் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் காலியாக இருந்தது. இந்நிலையில் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு இருப்பதால் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை ஒட்டி அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டு தொகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் தேதி அறிவிக்கப் படாமல் இருந்தது. சமீபத்தில் சென்னை வந்த மத்திய தேர்தல் ஆணைய கூடுதல் ஆணையர்களை சந்தித்து அரசியல் கட்சியினர் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டுகோள் வைத்தனர்.

இந்நிலையில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது .  4 தொகுதிகளிலும் மே.19 இடைத்தேர்தல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 18 தொகுதிகள் எண்ணப்படும் மே.23 அன்றே எண்ணப்படும் என்பதால் வேறு வேறு நாட்களில் நடத்தப்பட்டாலும், மே.23 அன்று 22 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகிறது.

ஏப்.22 அன்று வேட்புமனு தாக்கலும், ஏப்.30 அன்று வேட்பு மனு பரிசீலனையும் நடக்கிறது. மே. 19 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மே.23 தமிழக நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் 4 தொகுதிகளின் எண்ணிக்கையும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!