பள்ளிகளில் சமஸ்கிருத வழிபாடு நடத்துவது மதச்சடங்காகுமா? – சுப்ரீம் கோர்ட் டவுட்!

பள்ளிகளில் சமஸ்கிருத வழிபாடு நடத்துவது மதச்சடங்காகுமா? – சுப்ரீம் கோர்ட் டவுட்!

‘மத்திய அரசின் பள்ளிகளில், காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் சமஸ்கிருத சுலோகம் சொல்வது மதச் சடங்கை புகுத்துவதாகாது’ என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கமாக தெரிவித்துள்ளது.இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிட்டது.

மத்திய அரசால், நாடு முழுவதும் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சுலோகங்கள் சொல்வது கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த வழக்கறிஞர் விநாயக் ஷா  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ரோஹின்டன் எப். நாரிமன் தலைமையிலான அமர்வு முன், இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதத்தின் போது,  “பள்ளிகளில், ‘அஸதோ மா ஸத்கமய’ என துவங்கும் சமஸ்கிருத சுலோகம் பாடப்படுவது, மதத்தை புகுத்துவதாகாது. எல்லா மதங்களும் கூறும் பொதுவான உண்மையை, இந்த சுலோகம் போதிக்கிறது. சமஸ்கிருத மொழியில் இருப்பதால், மதத்தை புகுத்துவதாக கூற முடியாது. கிறிஸ்தவ பள்ளிகளில், ‘நேர்மை சிறந்த கொள்கை’ என பொருள்படும், ‘ஹானஸ்டி இஸ் தி பெஸ்ட் பாலிசி’ என்ற ஆங்கில வாசகம் போதிக்கப்படுகிறது. அது, மதவாத கருத்தாகுமா… அப்படி நான் நினைக்கவில்லை.  சுப்ரீம் கோர்ட்டின் சுலோகம் கூட, பகவத் கீதையின் வாசகமே. இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க  நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

Related Posts

error: Content is protected !!