ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி- க்கு இடைக்கால ஜாமீந் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

பில்டிங் இண்டீரியர் டிசைன் வேலை செய்து வந்த இளைஞர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரை உடனடியாக இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யுமாறு இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இண்டீரிய டிசைன் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.

தற்போது அர்னாப் கோஸ்வாமி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அர்னாப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், மும்பை ஐகோர்ட்டை அணுக சில்லி மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் ஆகியோர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை நிராகரித்து விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினர்.

இதையடுத்து அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மும்பை ஐகோர்ட் ஜாமீன் மனுவை நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று அர்னாபின் ஜாமின் மனுவை விசாரித்தது. அப்போது நம் ஜனநாயகம் அசாதாரண நெகிழ்திறன் கொண்டது. மகாராஷ்டிரா அரசு அவர் தொலைக்காட்சியில் காட்டப்படுபவைகளை பெரிதுபடுத்தக் கூடாது என்று அமர்வு கருதுகிறது என்றனர்.

நீதிபதி சந்திராசூட் கூறும்போது, “அவரது கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அவரது சேனலை இதுவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் இதில் நீதிமன்றங்கள் இப்போது தலையிடவில்லை எனில் நாம் அழிவின் பாதையில் செல்வதாகவே அர்த்தம், இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அர்னாபின் தனிநபர் சுதந்திரத்தை மறுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவருக்கு உடனடியாக இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

13 hours ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

15 hours ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

19 hours ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

20 hours ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

23 hours ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

1 day ago

This website uses cookies.