January 28, 2022

மும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி!

மகராஷ்டிராவின் தனி அடையாளமாக இருந்த பார்களில் நடனம்  ஆட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் நடனமாடும் பெண்கள் மீது கரன்சி நோட்டுகளை மழை போல் பொழிவதற்கு  அனுமதி மறுத்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் தற்போது பார்களில் பெண்கள் நடனமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் பார்களில் நடனமாட அனுமதி உள்ளது. அங்கு பாலியல் தொழிலும் நடைபெறுகிறது. கேப்ரே நடனம் ஆடும் ஸ்ட்ரிப்பர்கள்மீது சில்லரைகளை வீசுவர் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்.

இதற்கு இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால், இதுபோன்ற பார்களை மும்பையில் நடத்த அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்தனர் இந்திய பார் ஓனர்கள். மகாரா ஷ்ட்ரா 2016 மாநில சட்டப்படி பார்களில் பெண்கள் நடனமாடுவது தடை செய்யப்பட்டு இருந்தது. இதன் இறுதி தீர்ப்பானது இழுத்தடித்து கொண்டே சென்ற நிலையில் நடன பார்களுக் கான சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை மேற்கொண்டது. இதில், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் பார் அறைகளில் ஆபாச நடனம் மற்றும் மகளிர் கண்ணியம் பாதுகாப்பு (பணியில் இருப்போர்) சட்டம், 2016-ன் சில பிரிவுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  அதன்படி பார்களில் நடனம் ஆட அனுமதி அளிக்கப்பட்டது.

அதே சமயம் பார்களில்  சி.சி.டி.வி.க்களை கட்டாயம் நிறுவும் சட்ட பிரிவு, பார் அறைகள் மற்றும் நடன தளங்களுக்கு இடையே தடுப்பு இருப்பது கட்டாயம் என்ற சட்ட பிரிவு ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டன.  இதே போன்று நடனம் ஆடும் பெண்களுக்கு டிப்ஸ் (பணம்) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நடன பார்களில் பெண்கள் மீது கரன்சி நோட்டுகளை மழை போல் பொழிவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. நடனங்களின்போது மது அருந்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. மாலை 6 முதல் 11.30 மணிவரை மது சப்ளை செய்யலாம் என்று தெரிவித்தது.,

இதனுடன் மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒரு கி.மீ. தொலைவை கடந்து நடன பார்கள் அமைய வேண்டும் என்ற கட்டாய பிரிவு தள்ளுபடி செய்யப்பட்டது. நடன பார்கள் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரையே செயல்படலாம் என்று வழங்கப்பட்டு இருந்த அனுமதியை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.